சென்னை வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்க மாட்டார்.. மாணிக்கம் தாகூர் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை சென்னைக்கு வருகை தரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்திக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பியுமான மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ராகுலின் வருகை முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிக்கு மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாமில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். சென்னை வரும் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் விஜய்யை சந்திப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.

Rahul Gandhi unlikely to meet CM Joseph Vijay during Chennai visit says Manickam Tagore

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மாமல்லபுரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) டெல்லியிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறார். அவரது முழு பயண விவரங்கள் இன்று அறிவிக்கப்படும். இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி.

மேகதாது அணை பிரச்சனையில் பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் ஆகிய 3 பேர்தான் முக்கியமானவர்கள். இந்தப் பிரச்சனையில் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் முக்கியமில்லை.

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாமக தலைவர் ஏன் நேரடியாக பேசத் தயங்குகிறார். இங்கு வீரமாக பேசும் அவர், நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏன் தயங்குகிறார்? அங்கு ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர் பிரதமராகிவிட்டால், இம்தப் பிரச்சனை குறித்து நாங்கள் அவரிடம் தைரியமாக பேசுவோம்.

தமிழ்நாட்டுக்கு பாமக தலைவர் மட்டும் நல்லது செய்வது போலவும், மற்றவர்கள் எதிர்ப்பாக இருப்பது போலவும் பேசுகிறார். தமிழகத்தின் உரிமையை முதல்வர் உள்பட அனைவரும் விட்டுக் கொடுப்பது போல் பேசுவது சரியான செயல் அல்ல. இதுதொடர்பாக அனைவரின் மீதும் பாமக தலைவர் பழிபோடுவதை நிறுத்த வேண்டும்.

சென்னையில் என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவேன் என்று பாமக தலைவர் பேசினால் மட்டும் போதாது. அன்புமணிக்கு துணிச்சல் இருந்தால் அவர் டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியிடம் மேகதாது அணை கட்டுவதற்கு நீங்கள் ஆதரவு அளித்தால், உங்கள் கூட்டணியிலிருந்து பாமக வெளியேறிவிடும் என்று தைரியமாக கூறட்டும்.

இதேபோல் பாமக தலைவர் தொடர்ந்து ராகுல்காந்தியை வம்புக்கு இழுத்து பேசிக்கொண்டிருந்தால், அவருக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். அவர் பற்றிய பல்வேறு உண்மைகளை வெளியிடுவோம்" என்று மாணிக்கம் தாகூர் காட்டமாகத் தெரிவித்தார்.

சென்னை வரும் ராகுல் காந்தி முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பாரா என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, ​​காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருகை கட்சி நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இது காங்கிரஸ் கட்சியின் ஓர் உட்கட்சி நிகழ்வு. கட்சியின் 74 மாவட்டத் தலைவர்களிடம் உரையாற்றவே அவர் சென்னை வருகிறார் என்று அவர் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி வருகை தந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இரண்டு பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+