ஸ்டாலினை சந்திக்கணும்.. கனிமொழி வழியாக தூது விடும் ராகுல் காந்தி.. விஜய் மீது கடும் அப்செட்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சிக்காக அக்டோபர் 10-ந்தேதி சென்னைக்கு வருகிறார் ராகுல்காந்தி. முதல்வர் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த ராகுல் காந்தியின் நட்பில் அண்மைக்காலமாக சற்று இடை வெளியை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தவெக அரசு குறித்து ப்ரவீன் சக்கரவர்த்தியிடம் வாரத்தி ற்கு ஒருமுறை முன்பெல்லாம் விசாரிப்பார் ராகுல். அந்த விசாரிப்பும் சமீப காலமாக நின்று விட்டதாம். பாஜகவுடன் மறைமுகமான உறவை விஜய் வைத்திருப்பதாக சந்தேகப்படும் ராகுல், பாஜகவின் யோசனை படி தான் இந்தியா கூட்டணியில் விஜய் இணையாமல் இருக்கிறார் என்கிற சந்தேகம் வலுத்ததினால் தான் விஜய்யின் நட்பிலிருந்து விலகி நிற்கிறார் ராகுல்.

Rahul Gandhi

தேர்தல் ஆணையிட விவகாரத்தில் விஜய் மௌனம்

அதோடு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாகப் போராடி வருகின்றன

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தன்னாட்சி அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் முக்கியக் குற்றச்சாட்டு.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, தேர்தல் ஆணையர் மாற்றத்தை ஆதரிக்க மறுத்துள்ளது. "நாங்கள் SIR முறையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்; ஆனால் ஒரு தனி நபரை, அதாவது தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்" என்று தவெக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மீதோ அல்லது தேர்தல் ஆணையத்தின் தலைமை மீதோ நேரடியாக எந்தவொரு கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்காமல், விஜய் மௌனம் காத்து வருகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான முக்கிய விவகாரங்களில் தவெக தொடர்ந்து தயக்கம் காட்டுவது ராகுல் காந்திக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி அப்செட்

இந்த சூழலில், அக்டோபர் 10-ந்தேதி சென்னைக்கு வரும் ராகுல்காந்தியும், விஜய்யும் சந்திக்க வேண்டும் என்கிற பகீரத முயற்சியை ப்ரவீன் சக்கரவர்த்தியும் மாணிக்கம் தாக்கூரும் எடுத்து வருகின்றனர். ராகுலை சந்திப்பதில் விஜய் தரப்பில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், ராகுல் காந்தி இதற்கு இதுவரை இசைவு தெரிவிக்கவில்லையாம். பாஜகவுடன் விஜய் மறைமுக உறவை வைத்திருக்கிறார் என்கிற ராகுல் காந்தியின் சந்தேகத் தையும், அப்படியான ஒரு தோற்றம் பொது வெளியில் இருப்பதையும் உடைக்க வேண்டும் என்று விஜய்யின் ஆலோசகர்களும் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், ராகுலிடமிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை.

இந்த நிலையில், சென்னைக்கு வரும் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க விருப்பம் தெரிவித்து கனிமொழி மூலமாக தகவல் தந்துள்ளார். இதனை ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்ததும், ஸ்டாலினின் முகம் மாறியிருக்கிறது. அதேசமயம், ராகுலின் விருப்பத்திற்கு க்ரீன் சிக்னல் தராமல், காங்கிரஸ்சுக்கு எதிராக சில சங்கடங்களையும் வெளிப்படுத்தி யுள்ளார் ஸ்டாலின்.

இதனையறிந்து, "இந்தியா கூட்டணியில் திமுக இருந்த வரை ராகுல் காந்திக்கு மரியாதை இருந்ததது. இந்தியா கூட்டணியை விட்டு திமுக வெளியேறியதும் ராகுலுக்கு அந்த மரியாதையும் வெளியேறி விட்டது" என்று முணுமுணுக்கிறார்கள் காங்கிரஸ் கதர்ச்சட்டையினர். இந்த சூழலில், ராகுல் வருகையின் போது அவரை யார் சந்திப்பார் ? அவர் யாரை சந்திப்பார்? என்கிற கேள்விகளும் சத்தியமூர்த்திபவன் வட்டாரங்களில் எதிரொலிக்கச் செய்கிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+