'மாஸ்டரை விஞ்சிய பிளாக்பஸ்டர்.. வாழை இலை வட இந்தியர்' - ராகுல் வீடியோ ட்விட்டர் ரியாக்ஷன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஸ்டர் படத்தை விட ராகுல் காந்தியின் வில்லேஜ் குக்கிங் வீடியோ மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று ராகுல் வீடியோ குறித்து ட்விட்டர் வாசிகள் தங்கள் ட்வீட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Recommended Video

    கரூர்: கொஞ்சம் தமிழ்… ‘கமகம’ காளான் பிரியாணி…அசத்திய ராகுல் காந்தி!

    அடேங்கப்பா... கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற புதிருக்கு கூட விடை கண்டுபிடித்துவிடலாம் போலிருக்கு. ஆனால், ராகுல் காந்தி வருகையினால் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறதா, அல்லது வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்வில் கலந்து கொண்டதால் தமிழ் மக்கள் மனதில் ராகுலுக்கு பெரிய இடம் கிடைத்திருக்கிறதா என்று கண்டறிவது சிரமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு, ராகுலின் செயல்பாடுகள் மக்களை ஈர்த்துள்ளன.

     ஷியூர் ஷாட் ராகுல்

    ஷியூர் ஷாட் ராகுல்

    அவர் தமிழில் பேசியதாகட்டும், யூடியூப் சேனல் நபர்களுடன் சகஜமாக உரையாடியதாகட்டும், தயிர் பச்சடி செய்ய, வெங்காயம், கல் உப்பு, தயிரு என்று அவர் உச்சரித்த தமிழ் ஸ்லாங்காக இருக்கட்டும் அனைத்தும் ஷியூர் ஷாட் ரகம்.

    ராகுல் மேல் பெரிய அபிப்ராயம் இல்லாதவர்களுக்கு கூட, இந்த வீடியோவை பார்த்த பிறகு ராகுலை ரசிக்க நேரிடும். குறைந்தபட்சம் அந்த யூடியூப் சேனலையாவது ஃபாலோ செய்துவிடுவார்கள் போல. ஏனெனில், எடுத்துக் கொண்ட இந்த கண்டெண்ட் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

    தமிழகம் மட்டுமல்லாது, பரவலாக நாடு முழுவதுமே ராகுலின் இந்த செயல்பாடு உற்று நோக்கப்பட்டிருக்கிறது. எளிய மக்களிடம் அவர் பழகும் அணுகுமுறை மாற்று கட்சியினராலும் சற்று கலவரத்தோடு அணுகப்பட்டிருக்கிறது.. விவாதிக்கவும்பட்டிருக்கிறது.

    சரி... சமூக தளங்களில் ராகுலின் இந்த வீடியோ குறித்து வரும் கருத்துகள் என்னென்னவென்று சில சாம்பிள்களை இங்கே பார்க்கலாம்,

     மாஸ்டரை விட பலமடங்கு பெட்டர்

    மாஸ்டரை விட பலமடங்கு பெட்டர்

    ஒருவர் அதகளமாக மாஸ்டர் படத்தையே ராகுல் வீடியோவுடன் கம்பேர் செய்துவிட்டார். அந்த நபர் தனது டீவீட்டில், "மாஸ்டர் படத்தை விட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் இந்த வீடியோ தான். ராகுலின் இந்த வீடியோ மூலம், தமிழகத்தின் கிராமப்புறங்களுக்கே நேரில் சென்று சாப்பிட்டது போல் இருந்தது. 2 மணி நேரத்தில் 22 லட்சம் பேர் இதனை பார்த்திருக்கின்றனர். தமிழகத்தில் இதனை சூப்பர் டூப்பர் ஹிட் என்று அழைப்பார்கள்" என பதிவிட்டுள்ளார்.

     ராகுல் எனது இன்ஸ்பிரேஷன்

    ராகுல் எனது இன்ஸ்பிரேஷன்

    மற்றொருவர், ராகுலுடன் ஒரு நாள் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்த உலகில் வேறெதுவும் தேவையில்லை. எனது இன்ஸ்பிரேஷன் ராகுல் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

     புதிய அவதாரம்

    புதிய அவதாரம்

    ராகுலின் சமையல் பக்குவத்தை வியந்த மற்றொரு ட்விட்டர்வாசி, "இன்று நான் ராகுலின் புதிய அவதாரத்தைப் பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் ராகுல் ஒரு நல்ல சமையல்காரர் தெரியுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.

     வாழை இலை வட இந்தியர்

    வாழை இலை வட இந்தியர்

    இன்னொருவர் ஒருபடி மேலே சென்று, "வாழை இலையில் உள்ளூர்க்காரர்களை போல நேர்த்தியாக சாப்பிடத் தெரிந்த ஒரே வட இந்தியர் ராகுல் காந்தியாகத் தான் இருக்கக் கூடும்" என்று பதிவிட்டுள்ளார்.

     சகோதரர் ராகுல்

    சகோதரர் ராகுல்

    குறிப்பாக, ராகுலின் தமிழ் உச்சரிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது எனலாம். அப்படி ஓருவர் தனது ட்விட்டரில், "ராகுலின் 'தயிரு' என்ற உச்சரிப்பை கேட்கவே மகிழ்கிறேன். இந்த நபர் உண்மையில் சுத்தமானவர். எப்போதும் இயல்பாகவே இருக்கிறார். ஒரு சகோதரரைப் போல அவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டது மிக அருமை" என்று டீவீட்டியுள்ளார்.

     மட்டன் பிரியாணி செய்வோமா பாய்?

    மட்டன் பிரியாணி செய்வோமா பாய்?

    மற்றொரு ட்விட்டர்வாசி, பிரதமர் மோடி மட்டன் பிரியாணி செய்வோமா என்று இஸ்லாமிய நண்பர்களுடன் கேட்பது போல புகைப்படம் போட்டு நக்கலடித்துள்ளார்.

     'தயிரு' நமது உயிரு

    'தயிரு' நமது உயிரு

    இன்னொருவர் சற்று நெகிழ்ச்சியாக, தயிர் என்று சொல்லாமல், 'தயிரு' என்று ராகுல் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறோம். KFC-ல பக்கெட் பக்கெட்டா சாப்ட்டாலும், நாட்டுக்கோழி என்பது நம் உணர்வில் கலந்தது என்பதன் சிறிய சாம்பிள் தான் 'தயிரு' என்ற உச்சரிப்பினால் கிடைத்த அற்ப மகிழ்ச்சி, திருப்தி" என்று பதிவிட்டுள்ளார்.

    இப்படியாக கேலி, கிண்டல், நெகிழ்ச்சி, பாராட்டு என்று ராகுலின் வீடியோவை ட்விட்டர் அன்பர்கள் பரபரப்பாக வைத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+