முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் காந்தி விருப்பம்.. எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை: தமிழகம் வரும் போது முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்ததாக சட்டசபையில் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110 என் கீழ் முதல்வர் ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
பன்னாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு ரூ 3 கோடி முதல் பல்வேறு வகையான ஊக்க உதவித் தொகைகளைத் தொடர்ந்து வழங்கி, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

ஒலிம்பிக் விளையாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் (Championship) போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் (Mega Sports City) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.

ஒலிம்பிக் போட்டிகள்
ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் (Olympic Academies) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.

4 மண்டலங்கள்
தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் அகாதெமியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். விளையாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்தார்.

தமிழகம் வரும் போது
அப்போது அவர் கூறுகையில் அடுத்த முறை தமிழகம் வரும் போது முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்தார். போதி தர்மர் மரபணுவில் வந்தவர் முத்லவர் ஸ்டாலின் என செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் மாதத்தில் 2 அல்லது 3 முறை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அப்போது அங்கிருக்கும் கடைகளில் டீ குடித்தபடியே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவார். அது போல் தினந்தோறும் உடற்பயிற்சிகளை அவர் செய்ய தவறுவதே இல்லை.

ராகுல் விருப்பம்
இத்தனை வயதிலும் முதல்வர் ஸ்டாலின் இளமையாக இருக்க என்ன காரணம் என்பது குறித்த புத்தகத்தை எழுதுமாறு கடந்த முறை உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவின் போது ராகுல் தெரிவித்திருந்தார். அடுத்த முறை தமிழகம் வந்தால் முதல்வருடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி அங்கு பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தும் மாட்டுவண்டியில் சென்றும் சைக்கிள் ஓட்டியபடியும் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications