அவர் மாதிரியே இருக்காரா.. ஆமா.. அதே முகம்.. அதே ஹேர்ஸ்டைல்.. ராகுல்.. ராஜீவ் காந்தியாக மாறிய தருணம்!

ராகுல் காந்தியின் புது கெட்டப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த முகத்தை நாம இதற்கு முன்பும் பார்த்திருக்கிறோமே.. அவர்தான் இவரா? அவர் மாதிரியே இருக்காரா.. ஆமா.. அதே முகம்.. அதே ஹேர்ஸ்டைல்.. என்று ராகுல்காந்தியின் போட்டோவை வைத்து தொண்டர்கள் மகிழ்ந்து வருகின்றனர்!
''நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டபோது ஒரு உண்மையை நான் உணர்ந்திருந்தேன். அந்த சந்திப்பில் அவர் மீது நான் காதல் வயப்பட்டேன் என்பது தான் அது." என்று ஒருமுறை சோனியாக காந்தி தெரிவித்திருந்தார்..

சாதி, மதம், அந்தஸ்து மட்டுமில்லை, மொழி, நாடு என ஏகப்பட்ட விஷயங்களை கடந்து வாழ்க்கையில் ஒன்றுசேர்ந்த ஜோடிதான் ராஜீவ்காந்தி - சோனியாகாந்தியும்!

rahul gandhis new get up photo goes viral on socials

3 ஆண்டுகள் ராஜீவுக்காகவே காத்திருந்து கல்யாணம் செய்தார் சோனியா.. அதற்கு காரணம் ராஜீவின் அழகான முகம்.. நேருவை போலவே சாந்தம்.. இந்திராவை போலவே பொலிவு.. வாழ்நாள் வரை புன்னகையுடனே வலம் வந்த ரோஜாப்பூ நபர்!

மறக்க முடியாத இந்த முன்னாள் பிரதமர் போலவே அவரது மகன் ராகுல் காந்தி தென்படுகிறார்.. ஏதோ புது கெட்-அப்பில் இருக்கிறார்.. என்னென்ன மாற்றங்களை செய்து கொண்டாரோ தெரியவில்லை.. அச்சு அசல் அப்படியே ராஜீவை உரித்து வைத்ததுபோலவே உள்ளார்.. ஹேர்ஸ்டைல் மாறியிருக்கிறது.. புருவம், மூக்கு எல்லாம் மாற்றம் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது.. வித்தியாசம் தெரிகிறது.. ஆனால் என்னன்னு தான் சட்டென விளங்கவில்லை.

வெள்ளை கலர் அரைக் கை சட்டை அணிந்து உட்கார்ந்திருக்கிறார்.. இன்று அவர் அளித்த வீடியோ கான்பரன்ஸ் செய்தியாளர் சந்திப்பின்போதுதான் இந்த புதுத் தோற்றத்தில் இருந்தார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியே எழுந்து உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது. இதை பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் பூரிப்பில் உள்ளனர்.

இந்த போட்டோக்களையும் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.. இது ஒரு வகையில் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியும்கூட.. சோர்ந்து கிடக்கும் தொண்டர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+