வயநாட்டில் ராகுல்! கன்னியாகுமரியைப் புறக்கணித்தது ஏன்? தமிழ்நாடு வெறும் பகல் கனவா?
சென்னை: ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? அந்தக் கள சூழல் எப்படி உள்ளது. அவருக்குச் சாதகமான அம்சங்கள் என்ன?
காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 39 வேட்பாளர்களின் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் வெளியாகும்வரை அவர், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி அல்லது திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

திருச்சி அவருக்குச் சாதகமான தொகுதியாக இருக்கும் என்றும் 5 லட்சம் வாக்குகள் மேல் பெற்று ராகுல் வெற்றிபெறுவது உறுதி என்று திருச்சி வேலுச்சாமி நம்பிக்'கை' தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் டாடா காட்டி விட்டு மீண்டும் வயநாட்டில் போட்டியிட இருக்கிறார்.

உபியில் உள்ள ரேபரேலி தொகுதியில் 2002 முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். ஏறக்குறைய சோனியா 18 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரேபரேலியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
1999இல் அமேதியில் போட்டியிட்ட அவர், அதன்பின்னர் வேறு தொகுதிக்குப் போகாமல் ரேபரேலியில் மட்டுமே போட்டியிட்டு வெற்றியும் பெற்று வந்தார்.

ஆக, காலங்காலமாகக் காங்கிரஸ் கோட்டையாக ரேபரேலி இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடப் போவதில்லை. அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
எனவே தனது குடும்ப செல்வாக்கைக் கட்டிக்காப்பதற்காக ராகுல் தனது தாய் சோனியா தொகுதியான ரேபரேலியில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு அவர் வயநாடு பக்கமே திரும்பி இருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் சோனியா சுமார் 5 லட்சம் வாக்குகளை வாங்கிய ரேபரேலியை விட்டுவிட்டு அவர் மீண்டும் வயநாடு பக்கம் வந்ததற்கு சில காரணங்கள் உள்ளன.
குறிப்பாக, உபியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனால், உபி மக்கள் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் அதிக நம்பிக்கையை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதைக் காட்டிலும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுலின் பதவியைத்தான் பாஜக மறைமுகமாகப் பறித்தது. அதை அவர் மீண்டும் சட்டரீதியாகப் போராடி மீட்டார். ஆகவே, உபியைவிட, மீட்ட தொகுதியில் நிற்பதே நல்லது என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார்.

ஒருவேளை அவர் ரேபரேலியில் நின்றால், காங்கிரஸின் மற்றொரு கோட்டையான அமேதி தொகுதியை ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்துவிட்டு நின்றதைப் போல் ஆகக் கூடும் என ராகுல் அஞ்சுவதாகச் சொல்கிறார்கள்.
வயநாட்டில் ராகும் மொத்த வாக்குகளில் 64.94% கடந்த முறை பெற்றிருந்தார். ரேபரேலியில் கடந்த தேர்தலில் சோனியா 55.80% வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். ஆக, ரேபரேலியைவிட வயநாடு கொஞ்சம் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக ராகுல் உணர்ந்துள்ளார்.
அத்துடன் கடந்த 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதிக்குள் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் வயநாட்டுக்குள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்துள்ளது. எனவே வயநாடு தொகுதிக்கு 'ஆட்சிக்கு எதிரான நாடு' என்ற பெயரை ஆளும் கட்சியினர் சூட்டியுள்ளனர்.

தரவுகளின் படி ஆராய்ந்தால் மொத்த வாக்குகளில் 25.6% சிபிஐ(எம்) கட்சிக்கு விழுந்துள்ளது. காங்கிரசுக்கு 34.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மறைந்த காங்கிரஸ் தலைவர் எம்.ஐ.ஷாநவாஸ் கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.
அதாவது வயநாடு மக்களவைக்குள் இடம்பெற்றுள்ள மானந்த வாடி, திருவம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் சிபிஐஎம் வென்றுள்ளது. சுல்தான் பத்தேரி, கல்பெட்டா, வண்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.
இந்தச் சாதகமான சூழல்தான் ராகுல்காந்தியை வயநாடு பக்கம் தங்கவைத்துள்ளது. வயநாடும் ராகுலைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆசைதான் வெறும் பகல் கனவாகவே போய்விட்டது!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications