ஏக கடுப்பில் ராகுல் காந்தி.. அமித் ஷாவை பார்த்ததும் யு டர்ன் போட்ட விஜய்.. கொந்தளிக்கும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய சில நாட்களிலேயே முதல்வர் விஜய் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தளர்த்தியிருப்பதாக எழுந்துள்ள விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. விஜய்யின் இந்த மென்மையான நிலைப்பாட்டால் காங்கிரஸ் கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாம்.

Rahul upset over Delimitation

சட்டமன்ற தீர்மானம்

கடந்த ஆகஸ்ட் 12 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 ஆகவே நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் மற்றும் மாநிலங்களுக்கான தற்போதைய விகிதாச்சாரத்தை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே இதன் முக்கியக் கருத்தாக இருந்தது.

ஆனால், மகாபலிபுரத்தில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், 543 இடங்கள் என்ற வரம்பை வலியுறுத்துவதற்குப் பதிலாக, எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது delimitation வேண்டாம் என்று சொல்லாமல் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று வகையில் விஜய் சொன்னது பெரிய சர்ச்சையானது.

வித்தியாசம் என்ன?

மொத்த இடங்களை 543 ஆக அப்படியே மாற்றாமல் வைத்து இருப்பதற்கும்.. delimitation செய்துவிட்டு அதில் மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதத்தைப் மாற்றாமல் வைத்து இருப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும், தென் மாநிலங்களின் விகிதாச்சாரப் பங்கீடு குறைந்திடக் கூடாது என்ற ரீதியில் முதல்வர் விஜய் பேசியிருப்பது, மத்திய அரசின் திட்டத்திற்கு அவர் ஆதரவு அளிக்கிறாரோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் மத்தியில் கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கடும் தாக்குதல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரவு நேரத்தில் சந்தித்த பிறகுதான் விஜய்யின் இந்த 'யு-டர்ன்' நிகழ்ந்துள்ளதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுகையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டமன்றத்திலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித் ஷாவைச் சந்தித்தவுடன் முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்" என்று விமர்சித்தார்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசு கூறுவதையே தற்போது நீங்களும் கூறுகிறீர்கள்.. அப்படி என்றால் சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற நாடகத்தை ஏன் நடத்தினீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நாடகம் எனச் சாடியுள்ளார்.

ராகுல் அப்செட்

முன்னதாக இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் எட்டப்பவர்கள் என்று திமுகவை சாடி ராகுல் காந்தி பேசி இருந்தார். அவர்கள் தமிழின துரோகிகள் என்ற வகையில் அவர் பேசி இருந்தார். தற்போது ராகுல் காந்தி விஜய்யின் நிலைப்பாடு காரணமாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கூடவே இருந்துகொண்டு அமித் ஷாவை பார்த்தது கலர் மாறிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி கோபத்தில் இருக்கிறதாம். ராகுல் காந்தியும் ஏக கடுப்பில் இருக்கிறாராம்.

தென் மாநிலங்களின் கவலை

மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு தொகுதி மறுவரையறையையும் இணைத்து மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்பட்டால், வட மாநிலங்களின் மக்களவை இடங்கள் கணிசமாக உயரும் அதேவேளையில், குடும்பக் கட்டுப்பாட்டைத் திறம்படச் செயல்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் நிதிப்பகிர்வு குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் இந்த நிலைப்பாடு மாற்றம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+