"ஆபரேஷன் 10000".. கே.என் நேரு ரெய்டுக்கு பின்.. எடப்பாடி போட்ட மாஸ்டர்பிளான்.. யோசிக்காத ட்விஸ்ட்
சென்னை: அமைச்சர் நேரு குடும்பத்தினருக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமியின் கைங்கரியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2026 தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி கொடுத்த ஒரு ஃபைல்தான்.. இந்த ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள்.
அதிமுக பாஜக தற்போது நெருக்கமாகி வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா இடையே நடந்த மீட்டிங்கில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம்.

போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது. நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறி உள்ளார்.
அமித் ஷாவிடம் போன ஃபைல்:
கடந்த மாதம் கோவைக்கு வந்திருந்தார் அமித் ஷா. அப்போது அமித் ஷாவை சந்தித்த மணியான அமைச்சர் ஒருவர், எடப்பாடி கொடுத்ததாக ஒரு ஃபைலை அவரிடம் கொடுத்தார். அதில், திமுக அமைச்சர்கள் பலரின் சமீபகால அதீத பொருளாதார வளர்ச்சி, ஊழல் விவகாரங்கள் அனைத்தும் அதில் இருந்தன (இதனை அப்போதே நாம் எழுதியிருக்கிறோம்).
அதன் விளைவுதான் இந்த ரெய்டு என்கிறது அதிமுக தரப்பு. மேலும், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு 10,000 ரூபாய் வரைக்கும் கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வியூகத்தில் இருக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது.
அதற்காக, மக்களை பர்ச்சேஸ் செய்வது மட்டுமே அவர்களின் ஸ்டேட்டர்ஜி. ஓட்டுக்காக அவர்கள் கொடுக்கும் பணத்தை திமுகவைத் தவிர்த்து வேறு எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது. எந்த கட்சி அதிகம் பணம் கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு ஓட்டுப்போடுவதுங்கிறதுதான் தமிழ்நாட்டின் மனநிலை. அதனால் இதை கட்டுப்படுத்தாவிட்டால் கஷ்டம் தான்'' என்று விவரித்திருக்கிறார்கள். அதன் எதிரொலிதான் இந்த ரெய்டு. இனி அடுத்தடுத்து இடைவெளி விட்டு ரெய்டு நடக்கும் என்று அதிமுக தலைவர்கள் விவாதித்துக் கொள்கிறார்கள்.
ரெய்டில் நடந்தது என்ன?
3 நாட்களுக்கு முன் அதிகாலையில் நேருவின் சகோதரருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் சந்தேகத்தை கிளப்பியிருப்பதாகவும், எனவேதான் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான அடையாறு எம்.ஆர்.சி.நகரில் உள்ள TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் முதலில் ரெய்டு தொடங்கியது. பின்னர் நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீட்டிலும் அதை தொடர்ந்து தற்போது நேருவின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. இந்த சூழலில், நேற்று மதியம், நேருவின் சகோதரர் ரவியை விசாரணைக்காக வரவழைத்த அமலாக்கத்துறை அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் திணறடித்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications