Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்பதிவில்லாத டிக்கெட் வாங்குவோருக்கு 3% தள்ளுபடி.. ரெயில் ஒன் செயலியில் இன்று முதல் சூப்பர் ஆஃபர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெயில் ஒன் செயலியில், முன்பதிவு டிக்கெட்கள், முன்பதிவில்லாத டிக்கெட்கள், பிளாட்பார்ம் டிக்கெட்கள், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ரயில் பெட்டிகளின் விவரம், PNR நிலவரம் போன்ற பல்வேறு வசதிகளை பெற முடியும். இந்நிலையில், மீண்டும் ஒரு சலுகையை ரயில்வே நிர்வாகம் இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

பெரும்பாலான பயணிகள் இன்று ரயில் டிக்கெட்டுகளை மொபைல் செயலிகள் மூலம் வாங்குகிறார்கள். இதனால், ரயில் நிலையங்களில் லைனில் காத்திருக்க தேவையில்லை, வீட்டிலிருந்தே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

Rail One App 3 Discount Non-Reserved Tickets Train Tickets 3

தற்போதைய கணக்கில் சுமார் 89% பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். இது டிஜிட்டல் முறையின் மூலம் பயணிகளுக்கு சுலபம், நேரம் மற்றும் பணத்தை சேமிக்கும் வசதியையும் தருகிறது.

ரெயில் ஒன் செயலி சிறப்புகள்

இந்த சூழலில், இந்திய ரயில்வே ரெயில் ஒன் என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது... இதன்மூலம் பயணிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களுக்கு டிக்கெட் வாங்கும் வசதியை ஒரே செயலியில் பெறமுடியும்..

முன்பு ஐஆர்சிடிசி, UTS போன்ற தனித்தனி செயலிகள் இருந்தன. இப்போது Rail One செயலி வழியாக பயணிகள் அனைத்து வகை ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது.

3 சதவீத தள்ளுபடி

இதற்கு கூடுதல் ஊக்கமாக, ரயில்வே இப்போது புதிய 3 சதவீத தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, Rail One செயலியில் முன்பதிவு செய்யாத டிக்கெட் வாங்கும் பயணிகள், எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தினாலும், மொத்த கட்டணத்தில் 3% தள்ளுபடி பெறுவார்கள். இதற்கு முன்பு R-வாலட் மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைத்தது.

இந்த புதிய திட்டத்தில் எந்தவொரு டிஜிட்டல் பேமெண்டும் செல்லுபடியாகும், அதனால் பயணிகள் எளிதில் தள்ளுபடியை பெற முடியும்.

இந்த தள்ளுபடி திட்டம் இன்று அதாவது 14 ஜனவரி 2026 முதல் 14 ஜூலை 2026 வரை அமலில் இருக்கும். இதனால் ரெயில் ஒன் செயலியில் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை வாங்க பயணிகள் அதிகம் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம், இந்த தள்ளுபடி திட்டம் மூலம் டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

இன்று முதல் அமல்

மேலும், ரெயில் ஒன் செயலியில் R-வாலட் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடி திட்டமும் தொடரும். ஆனால், இந்த செயலியை தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் வாங்கினாலும் இந்த புதிய சலுகை கிடையாது என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டம் செயல்படும் போது, ரயில்வே டிக்கெட் முன்பதிவு மென்பொருள் அமைப்புகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி வழியாக தொலை தூர ரயில்களுக்கு மட்டும் இன்றி லோக்கல் மின்சார ரயில்களுக்கும் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. ரயில் ஒன் செயலியை தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் செய்தாலும் இந்த ஆஃபர் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுருக்கமாக சொல்லப்போனால், ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளுக்கு இப்போது பயணிகள் எளிதில் 3% தள்ளுபடி பெறலாம். இது டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான முயற்சியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+