Railway Job: ரயில்வே வெளியிட்ட பொன்னான வாய்ப்பு.. ஜூனியர் என்ஜினியர் பணியிடங்கள்.. ஆரம்பமே 34,000 சம்பளம்
சென்னை: ரயில்வேயில் (Railway RRB Job) ஜூனியர் என்ஜினியர் பணியிடங்கள், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 2,570 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 7 வது ஊதிய கமிஷன் நிலை 6-ன் படி ஆரம்ப சம்பளமே ரூ.35,400 வழங்கப்படும்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஆர் ஆர் பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்துகிறது.

ஆர் ஆர் பி வெளியிட்ட அறிவிப்பு
ஆர் ஆர் பி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழக்கம். ரயில்வே நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் பணி கிடைத்துவிடும் என்பதால் எப்படியாவது இந்த தேர்வில் வென்று ரயில்வே வேலை என்ற கனவை அடைந்து விட வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் எண்ணமாக உள்ளது.
தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது. ரயில்வே வெளியிட்டு இருக்க கூடிய இந்த தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்களையும் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஜூனியர் என்ஜினியர்
* டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர்
* வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர்
ஆகிய பணிப்பிரிவுகளில் மொத்தம் 2,570 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி
* ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் பணிக்கு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பணிக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை கொண்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம்.
வயது வரம்பு:
30.11.2025 தேதிப்படி 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
7 வது ஊதிய கமிஷன் நிலை 6 -ன் படி சம்பளமாக வழங்கப்படும். அதாவது ஆரம்ப சம்பளமே ரூ.35,400 வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, பெண்கள் உளிட்டோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.
முதல் கட்ட தேர்வு எழுதுபவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். தற்போது ஷார்ட் நோட்டீஸ் வெளியாகியுள்ளது. விரைவில் ஆர்.ஆர்.பி இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbapply.gov.in/#/auth/landing
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications