ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் வந்தால் ஏசி பெட்டியில் பயணிக்கலாமே! கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஏசி பெட்டிகளின் காலி இடங்களை ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்தும் ரயில்வே தெளிவுப்படுத்தியுள்ளது.

ரயில் பயணம் என்பது பெரும்பாலானோருக்கு மிகவும் சவுகரியமான ஒன்றாக உள்ளது. இந்த ரயில்களில் கட்டணமும் குறைகிறது. ரயிலில் பயண நேரமும் குறைவாக இருக்கும். இதனால் பலர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.

railway tamil nadu

ரயில் பயணம் சுலபம்தான், ஆனால் டிக்கெட் புக்கிங் செய்வதுதான் கடினம். அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே புக் செய்ய முடியும். அதிலும் வேகமான இன்டர்நெட் சேவை இருந்தால் கிடைக்கும். தொடர் விடுமுறை நேரங்களில் கிடைப்பது சிரமமாக இருக்கும். நூற்றுக்கணக்கான சீட்டுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தால் எப்படி கிடைக்கும்.

இது போல் சில நேரங்களில் புக் செய்யும் போது டிக்கெட் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் போகும். அது போன்ற சமயங்களில் பெட்டிகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். ஆனால் ஒரு ரயிலில் 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் அதில் ஒதுக்கீடு செய்யும் முறையும் இருக்கிறது.

இந்த முறை கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

அதாவது ரயிலில் இரண்டாவது வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் காத்திருக்கும் பயணிகளுக்கு 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டி, 2ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் அவற்றில் கூடுதல் கட்டணம் இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது போல் 3ஆம் வகுப்பு எக்னாமிக் பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு 3ஆம் வகுப்பு ஏசி, 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் ஒதுக்கப்படும். இது போல் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் 2ஆம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இல்லாமல் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கை பெட்டியிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இது போல் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முதல் வகுப்பு ஏசியில் காலி இடமிருந்தால் ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+