தாம்பரத்தில் இருந்து அதிக தென்மாவட்ட ரயில்கள்? 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்பட தயாராகுங்க!
Recommended Video
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பரிசீலித்து வருவதால் சென்னையின் அம்பத்தூர் மற்றும் திருவெற்றியூர் பகுதி மக்கள் பல மணி நேரத்திற்கு முன்பே கடும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து தாம்பரம் செல்ல தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
சென்னையை பற்றி சென்னை வாசிகளுக்கு அதிகம் சொல்லவேண்டியதில்லை. சென்னையின் மற்றாரு பெயராக கூட போக்குவரத்து நெரிசல் என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் சென்னை.
தென்மாவட்டமக்கள் பலரும் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு புறப்பட எழும்பூர் ரயில் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது சென்னையின் மையப்பகுதியில் இருப்பதால் சென்னையின் வடக்கு தெற்கு, மேற்கு பகுதி மக்களுக்கு எளிமையாக உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம்
இந்நிலையில் நெரிசல் மிகுந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிக ரயில்களை இயக்கம் ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அம்பத்தூர்வாசிகள்
இதனால் சென்னை அம்பத்தூர், எண்ணூர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், ரயில் புறப்பட சில மணிநேரங்களுக்கு முன்பே பல கிலோமீட்டர் தூரம் பயணித்து தாம்பரம் சென்று தங்கள் ஊருக்ககான ரயில்களை பிடிக்க வேண்டிய நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் ஊரறிந்த விஷயம் என்கிற நிலையில், அதி தென் மாவட்ட ரயில்களை எக்மோரில் இருந்து தாம்பரத்திற்கு மாற்றுவது என்பது நிச்சயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதிகை எக்ஸ்பிரஸ்
தெற்கு ரயில்வே நிர்வாகம் தாம்பரத்தில் இருந்து அதிக ரயில்களை இயக்க விரும்புகிறது. ஏனெனில் தற்போது சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்களை கடற்கரை மற்றும் எக்மோர் வழியாக தெற்கு நகரங்களுக்கு இயக்கி வருகிறது. இதேபோல் வட மாநிலங்களுக்கு எழும்பூரில் இருந்து பீச் வழியாக இயக்கி வருகிறது.

லோக்கல் ரயில்
ரயில்வே ஒருவேளை தாம்பரத்திற்கு தென்மாவட்ட ரயில்களை மாற்றினால், தாம்பரத்திற்கு அதிக லோக்கல் ரயில்களை திருவள்ளூர், பீச் வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வடமாநிலங்களுக்கு
தெற்கு ரயில்வே நிர்வாகம் தாம்பரத்தில் இருநது அதிக ரயில்களை இயக்க விரும்புகிறது. ஏனெனில் தற்போது சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்களை கடற்கரை மற்றும் எக்மோர் வழியாக தெற்கு நகரங்களுக்கு இயக்கி வருகிறது. இதேபோல் வட மாநிலங்களுக்கு எழும்பூரில் இருந்து பீச் வழியாக இயக்கி வருகிறது.

தாம்பரம் சாய்ஸ்
இனிமேல் புதிய ரயில்களை எக்மோரில் இருந்து இயக்குவது சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது. மேலும் எக்மோர் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது. எனவே இனி தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றால் தாம்பரத்தில் இருந்து தான் இயக்க வேண்டிய நிலை உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் தான் தாம்பரத்திற்கு கூடுதல் லோக்கல் ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications