இன்று இரவு 10 மணிக்குள்.. 18 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, தருமபுரி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert 18 Tamil Nadu Districts May Receive Rain Before 10 PM Tonight

காற்றழுத்த தாழ்வுப்பாதை

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 23) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு

24 ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

25 ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 26 முதல் 28 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானயும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை விஐடியில் 6 செமீ, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை சோழிங்கநல்லூர், ராணிப்பேட்டை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தலா 3 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, விழுப்பும் மாவட்டம் வல்லம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+