அட்றா சக்க.. தமிழ்நாட்டில் ஆகஸ்டு 21 வரை அடை மழை! சென்னையில் இன்னைக்கும் நாளைக்கும் சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain alert in Chennai and other districts in Tamilnadu until August 21

17.08.2023 முதல் 21.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சத்தியார் (மதுரை) 7, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 6, திருமங்கலம் (மதுரை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), Kvk காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), காட்பாடி (வேலூர்), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 5, செஞ்சி (விழுப்புரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), கல்லிக்குடி (மதுரை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 4, ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம், எம் ஜி ஆர் நகர் (சென்னை), குப்பன்பட்டி. (மதுரை), திருத்தணி PTO (திருவள்ளூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), Rscl செம்மேடு (விழுப்புரம்), மணப்பாறை (திருச்சி), ஆண்டிபட்டி (மதுரை), செய்யாறு (திருவண்ணாமலை) தலா 3, சோழவந்தான் (மதுரை), அம்மூர் (ராணிப்பேட்டை), பெரியபட்டி (மதுரை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), விருதுநகர் AWS, நிலக்கோட்டை (திண்டுக்கல்), தென்பரநாடு (திருச்சி), சோழிங்கநல்லூர் (சென்னை), பேரையூர் (மதுரை), அன்னவாசல் (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை), அம்முண்டி (வேலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 2, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), நத்தம் (திண்டுக்கல்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), பொன்னை அணைக்கட்டு (வேலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), திருவள்ளூர், ஆவடி (திருவள்ளூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), சென்னை கலெக்டர் அலுவலகம், திருச்சி விமான நிலையம், செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கொப்பம்பட்டி (திருச்சி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திரூர் Kvk AWS (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), அடையாறு (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 1.

Rain alert in Chennai and other districts in Tamilnadu until August 21

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+