குளுகுளுவென மாறிய சென்னை! அதிகாலை முதலே பல இடங்களில் பரவலாக மழை!
சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களிலும் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது.

வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் நிலவும் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதிகன மழை பெய்யும். தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகாலை மழை
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

புறநகர் பகுதிகளிலும் மழை
சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், மாதவரம், மணலி, கொளத்தூர், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி மற்றும் திருவள்ளுர், மணவாளநகர், பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் இன்று லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே லேசமான மழை பெய்து வருவதால், சாலை செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications