நாளை புதிய “சோர்ஸ்”.. மாறிய “ஸ்பீடு”! இன்னும் 4 நாள் மழை.. புதிய தாழ்வு நிலை -வெளியான வானிலை அப்டேட்
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மதியம் 12:45 மணியளவில் வெளியான அறிக்கையில், "
15.11.2022 (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.11.2022 (நாளை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 நாள் மழை
17.11.2022 மற்றும் 18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாலுமுக்கு (திருநெல்வேலி) 12, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 9, கீழ் கோதையர் ARG (கன்னியாகுமரி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 7, திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), பெரம்பூர் (சென்னை) தலா 6, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), மயிலாடி (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 5, வந்தவாசி (திருவண்ணாமலை), டிஜிபி அலுவலகம் (சென்னை), வைப்பார் (தூத்துக்குடி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பூந்தமல்லி (திருவள்ளூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சென்னை விமானநிலையம், பீளமேடு (கோயம்புத்தூர்), மீனம்பாக்கம் இஸ்ரோ AWS (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 4, சேத்பேட்டை (திருவண்ணாமலை)), திருச்செந்தூர் (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), வேதநத்தம் (தூத்துக்குடி), தொண்டி (இராமநாதபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), காஞ்சிபுரம், சிவலோகம் (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), திருவாடானை (இராமநாதபுரம்), கன்னியாகுமரி, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சோலையார் (கோயம்புத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சென்னை ஆட்சியர் அலுவலகம், ஆவடி (திருவள்ளூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 3, மதுராந்தகம் (செங்கல்பட்டு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), தரமணி ARG (சென்னை), இரணியல் (கன்னியாகுமரி), தாம்பரம் (செங்கல்பட்டு), தொண்டையார்பேட்டை (சென்னை), மோகனூர் (நாமக்கல்), ராதாபுரம் (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), செங்கல்பட்டு, சென்னை நுங்கம்பாக்கம், ஆரணி (திருவண்ணாமலை), சிற்றாறு (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), போளூர் (திருவண்ணாமலை), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), நாகுடி (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்), பறளியாறு (நீலகிரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்), கலவை AWS (இராணிப்பேட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பெருந்துறை (ஈரோடு), மணல்மேடு (மயிலாடுதுறை), வட்டானம் (இராமநாதபுரம்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), மருங்காபுரி (திருச்சி), உசிலம்பட்டி (மதுரை), அம்பத்தூர் (திருவள்ளூர்), கயத்தாறு (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2, சுருளக்கோடு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), சூரங்குடி (தூத்துக்குடி), தென்காசி, செய்யார் (திருவண்ணாமலை), சின்கோனா (கோயம்புத்தூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), தூத்துக்குடி, ஆயின்குடி (புதுக்கோட்டை), பாம்பன் (ராமநாதபுரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), பொன்னேரி (திருவள்ளூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), தேவகோட்டை (சிவகங்கை), தக்கலை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), திருப்போரூர் (செங்கல்பட்டு), செங்கோட்டை (தென்காசி), குளச்சல் (கன்னியாகுமரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கன்னிமார் (கன்னியாகுமரி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பாரூர் (கிருஷ்ணகிரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), அவினாசி (திருப்பூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), மானாமதுரை (சிவகங்கை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), திருநெல்வேலி, திருப்பூர், சிதம்பரம் AWS (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஆய்க்குடி (தென்காசி), க.பரமத்தி (கரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), முத்துப்பேட்டை (திருவாரூர்), குமாரபாளையம் (நாமக்கல்), கயத்தாறு AWS (தூத்துக்குடி), மணமேல்குடி (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), திண்டுக்கல், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), அவலூர்பேட்டை (விழுப்புரம்), சத்தியமங்கலம் (ஈரோடு), வேடசந்தூர் (திண்டுக்கல்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மணியாச்சி (திருநெல்வேலி), அன்னூர் (கோவை), மயிலாடுதுறை, மேல் கூடலூர் (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்), பள்ளமூர்குளம் (ராமநாதபுரம்), குடியாத்தம் (வேலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), MRC நகர் (சென்னை), நந்தனம் ARG (சென்னை), ராம்நாடு Agro (ராமநாதபுரம்) தலா 1.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (16.11.2022) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
16.11.2022 மற்றும் 17.11.2022: தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சூறாவ்ளிக்காற்று
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications