கேப்பே இல்ல.. பொளந்து கட்டிருச்சே! ஆல் ஏரியால சென்னை கில்லி! வெயிலில் மட்டுமில்ல.. மழையிலும் சதம்
சென்னை: கடந்த சில வாரங்களாக வெயிலில் 100 டிகிரியை தொட்ட சென்னை, தற்போது மழையிலும் 100 மில்லி மீட்டரை தாண்டி இருக்கிறது. கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக வெப்பம் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து உள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மழை காலங்களுக்கு இணையாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இன்றும் காலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை வெளுத்து கட்டி இருக்கிறது. இது தொடர்பாக நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பதிவான மழைப்பொழிவு விபரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அந்த தகவல் பின்வருமாறு..
கண்காணிப்பு நிலையங்கள்: மீனம்பாக்கம் (சென்னை) 137.6, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 117.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 109.5, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 82.0, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 79.0, நுங்கம்பாக்கம் (சென்னை) 67.4, குட் வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 50.0, புழல் (திருவள்ளூர்) 46.5, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 41.0, LMOIS கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 40.0, கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்) 35.5, மாதவரம் (சென்னை) 34.0 என சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் கடலூர் (கடலூர்) 28.0, சிதம்பரம் (கடலூர்) 24.0, எண்ணூர் போர்ட் (சென்னை) 23.0, காரைக்கால் 23.0, எம்ஆர்சி நகர் (சென்னை) 21.0, புதுச்சேரி கேவிகே (புதுச்சேரி) 20.5, புதுச்சேரி (புதுச்சேரி) 18.0, திரூர் கேவிகே (திருவள்ளூர்) 10.5, வால்பாறை_ (கோயம்புத்தூர்) 8.8, கொடைக்கானல் (திண்டுக்கல்) 7.0, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 6.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 6.0 மழை கொட்டி உள்ளது.
விருத்தாசலம் கேவிகே (கடலூர்) 5.0, தரமணி (சென்னை) 4.5, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) 4.5, வேலூர் (வேலூர்) 2.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 2.0, திருத்தணி (திருவள்ளூர்) 2.0, அம்பன் கேவிகே (புதுக்கோட்டை) 2.0, விரிஞ்சிபுரம் கேவெகே (வேலூர்) 1, பெரியகுளம் (தேனி) 1, தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 0.5. தொண்டி (ராமநாதபுரம்) 0.3, திருச்சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) 0.1 என்ற அளவில் மழை பெய்து இருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications