ஜில் ஜில் மழையே எங்கே இருந்தாய்.. செம காற்று! சென்னையில் கொட்டிய மழை - குதூகலித்து கொண்டாடும் மக்கள்
சென்னை: கடந்த சில மாதங்களாக சென்னையில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பெரும்பாலான மாவட்டங்களில் மக்களை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக மக்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.

குறிப்பாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. மே மாதத்தில் உச்சம் தொட்ட வெயில், ஜூன் மாதம் குறையும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக வெப்பம் பதிவானது.
In Chennai -78, k k.nagar, mgr nagar, good rain pic.twitter.com/pTWnuGmt56
— gopalakrishnanvelu (@gopalakrishanv) June 10, 2023
இதனை குறைக்க அவ்வப்போது மழை பெய்தாலும், அது போதவில்லை என்றே மக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை முதல் சென்னையில் பரவலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, அசோக் நகர், கேகே நகர், பம்மல், நங்கநல்லூர், மடிப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்." என்று தெரிவித்தது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளை பொறுத்தவரை, "10.06.2023 மற்றும் 11.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.06.2023 முதல் 14.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்." என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications