லேட்டாக வந்தாலும்.. சும்மா கிழி.. சென்னையை உலுக்கிய ஓவர்நைட் மழை... ! #chennairains
சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது
Recommended Video
சென்னை: லேட்டாக வந்தாலும் சரியான மழையைப் பெற்றுள்ளது சென்னையும், புறநகர்ப் பகுதிகளும். சும்மா கிழி என்று நேற்றுதான் ரஜினி பாடல் வெளியானது. ஆனால் மழை வந்து சென்னையை கிழித்துப் போட்டு விட்டது. புறநகர்ப் பகுதிகள்தான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த வட கிழக்கு பருவ மழை சீசன் சரியாகவே இல்லை. குறிப்பாக சென்னையில் ஆரம்பத்தில் கொஞ்சம் மழை பெய்தது. அப்புறம் ஆளையே காணோம். இந்த நிலையில்தான் நேற்று திடீரென வந்து வெளுத்தெடுத்து விட்டது ஒரு சூப்பர் மழை.
இந்த சீசனிலேயே இதுதான் வெள்ளக்காடாக்கி விட்டுச் சென்ற முதல் மழை. அந்த வகையில் சென்னை மக்களுக்கு ஹேப்பிதான். குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடாமல் வெளுத்தெடுத்து விட்டது மழை. சென்னை நகரிலும் மழை நன்றாகவே பெய்துள்ளது. இந்த மழைதான் இப்போது டிவிட்டரில் டிரெண்டிங்.
|
மிதக்கும் துரைப்பாக்கம்
இது துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சாலை. அடித்த மழையில் வெள்ளமென சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
|
மழை நீரை சேமியுங்க
இவரே தான் மழை நீரை சேமிப்பது குறித்த ஒரு வீடியோவையும் போட்டுள்ளார். இதை அனைவருமே பின்பற்றினால் ரொம்பவும் நல்லதுதான்.
|
முதல் லீவு
அடித்து ஊற்றிய மழைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு லீவு கிடைத்து விட்டது. சென்னை திருவள்ளூருக்குக் கிடைக்கலை. இன்று கிடைத்தாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
|
வேளச்சேரி சாலை ஜாம்
கன மழையால் தாம்பரம் - வேளச்சேரி சாலை மொத்தமாக டிராபிக் ஜாம் ஆகியுள்ளது. பல இடங்களில் மழை நீர் ஓடுகிறது.
|
இன்னும் பெய்யட்டும்
இந்த மழை எதிர்பார்த்த ஒன்று. இன்னும் நிறையப் பெய்ய வேண்டும் என்று இவர் மழையை வரவேற்றுள்ளார்.
மழை பெய்தால் சங்கடப்படாமல் அதை சந்தோஷமாக வரவேற்ற காலம் போய் விட்டது. வீட்டுக்குள் வந்து விடுமோ.. வெள்ளக்காடாகி விடுமோ என்ற பயம்தான் இப்போதெல்லாம். ஆனால் இன்று இந்த மழை நீருக்காக உலகமே தவமிருக்கிறது. எனவே வராது வந்த இ்நத மாமழையை வரவேற்று மழை நீரை சேமிக்க முயற்சிப்போம்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications