சென்னையில் மழை விடாது.. 10 மணி வரை விட்டு விளாசப் போகுது.. தமிழகம் முழுக்க18 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணியளவில், சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு, திருவேற்காடு பகுதியில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டியது.

Rain is likely in 18 districts of Tamil Nadu including Chennai until 10 PM - imd

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குறிப்பாக அரியலூர், திருப்புவனம், சிவகங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக இரவு 7 மணியளவில் சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பரம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு, திருவேற்காடு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர் உள்பட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நாளை கிளைமேட் எப்படி?

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (12-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+