தெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் குளிரான தட்ப வெட்பம் நிலவுகிறது.
வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடிவடையாத நிலையில், சென்னையில் இன்று மாலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இரவில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தாம்பரம், தரமணி, கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, அசோக் நகர், ஈக்காடுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் வடசென்னையின் தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது.
ஏற்கனவே டிசம்பர் மாதம், இதமான தட்ப வெப்பம் நிலவும் சென்னையில், மழையும் சேர்ந்து கொண்டதால் இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பைவிட குறைவான அளவுக்குத்தான் சென்னையில் மழை பதிவாகி உள்ளது. இனிவரும் நாட்களிலும் மழை தொடர்ந்து, மழை பற்றாக்குறையை ஈடு செய்தால்தான், தண்ணீர் பிரச்சனையை, தாக்குபிடிக்க முடியும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.
30 நிமிடமாக மயிலாப்பூரில் நல்ல மழை.. @chennaiweather @ChennaiRains #chennairains pic.twitter.com/CFbhVjRiIO
— RAJAN NELLAI (@NELLAIRAJAN) December 13, 2019
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications