நேரம் கம்மியாதான் இருக்கு.. அச்சறுத்தல் இருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய தகவல்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதனால் மழையின் தீவிரம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தாழ்வு நிலை
இந்த நிலையில்தான் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் இன்று மாலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மழை
இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்று உறுதியாக தெரியவில்லை. அதேபோல் தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக உருவெடுக்குமா என்றும் தெரியவில்லை. இது தொடக்க நிலைதான். ஆரம்பத்திலேயே அனைத்தையும் கணிக்க முடியாது. இதனால் தாழ்வு நிலை உருவாவதை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்க தொடங்கி உள்ளது.

ட்வீட்
இந்த நிலையில்தான் இந்த தாழ்வு மையம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். அதில், நவம்பர் 10-12 தேதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையை கண்காணிக்க வேண்டும். இந்த தாழ்வு நிலை பெரிய காற்று கொண்ட புயலாக மாறுவதற்கு போதிய அவகாசம் இல்லை. நேரம் குறைவாகவே இருக்கிறது.

புயல்
ஆனால் புயல் உருவாகிறதோ இல்லையோ. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், அதன் அண்டை மாவட்டங்களிலும் மழைக்கான அச்சறுத்தல் இருக்கிறது. இதையும் பாதுகாப்பாக கடந்து செல்வோம் என நம்புவோம், என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications