ரயிலுக்குள் கொட்டிய அருவி.. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் கசிந்த மழைநீர்.. பயணிகள் அவதி! வீடியோ
சென்னை: சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிக்குள் மழைநீர் கசிந்தது. மேலும் அருவி போல் மழைநீர் கொட்டியதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரிக்கு ரயில்கள் அதிகம் சென்று வருகின்றன.

அந்த வகையில் இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12633) புறப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டது. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் தான் இரவில் ரயில் செல்லும் இடங்களில் மழை பெய்தது. இந்த வேளையில் சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இருந்து மழைநீர் கசிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை அதிகரித்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. மேலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் மயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மழை நீர் கசிந்த பெட்டிக்குள் வரவழைக்கப்பட்டனர். பெண் ஊழியர் துடைப்பம் கொண்டு ரயில் பெட்டியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர். ஏசி பெட்டிக்குள் அருவிபோல் கொட்டிய மழைநீரால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை-கன்னியாகுமரி ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கசிந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் பலரும் ரயில்வே துறையை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications