ஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி!
Recommended Video
சென்னை: சென்னையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது.
இந்த நிலையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அது போல் நார்வே வானிலை மையம் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை இருக்கும் என கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
இதுகுறித்து அந்த மையம் கூறுகையில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து சனிக்கிழமை நண்பகல் முதல் மழை பெய்யும். பின்னர் இந்த மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும்.

கனமழை
திங்கள்கிழமை செப்டம்பர் 23-ஆம் தேதியும் பகல் வேளையில் மழை பெய்யும். செவ்வாய்க்கிழமையும் இதே நிலைதான் நீடிக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை கனமழை பெய்யும்.

நல்ல மழை
பின்னர் அந்த நாள் முழுவதும் நீடிக்கும் மிதமான மழை, புதன்கிழமை முழுவதும் இருக்கும். பின்னர் வியாழக்கிழமையும் மழை பெய்யும். வெயில், மழை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கும்.

நார்வே வானிலை மையம்
வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதியும் மிதமான மழை பெய்யும். பின்னர் வெயில் வரும். இதையடுத்து சனிக்கிழமையன்றும் மழையும் வெயிலும் இருக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications