ஒருபக்கம் பைபர்ஜாய்.. மறுபுறம் வெப்ப சலனம்.. அடுத்த 5 நாளுக்கு சரவெடி தான்.. வானிலை மையம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பைபர்ஜாய் வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் கோவாவில் இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 700 கி.மீ தொலைவில் மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கி.மீ தொலைவில் போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 600 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

பைபர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு அடுத்த மூன்று தினங்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும்.

Rain will occur with lightning and thunder for next 5 days in tamilnadu

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 10 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை : ஜூன் 10 லட்சத்தீவு பகுதிகள் கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+