Samantha Wedding: சமந்தா திருமணம் செய்து கொண்ட "பேமிலி மேன்" இயக்குநர் ராஜ் நிடிமோரு யார்! அவரது சொத்து மதிப்பு என்ன!
சென்னை: நடிகை சமந்தா தனது நீண்ட காலக் காதலர் ராஜ் நிடிமோரு என்பவரை நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டார். கோவையில் ஈஷா வளாகத்தில் இவர்கள் திருமணம் எளிமையாக நடைபெற்றது. சமந்தா திருமணம் செய்து கொண்ட இந்த ராஜ் நிடிமோரு யார்.. இவரது சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது பல்வேறு மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.. கடந்த சில காலமாகவே இவர் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை டேட் செய்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்தச் சூழலில் அவர்களுக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது.

தி ஃபேமிலி மேன் இயக்குநர்
நேற்று டிசம்பர் 1ம் தேதி கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் இந்தத் தம்பதியின் திருமணம் நடைபெற்றது. இதில் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தியத் திரையுலகில் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளையும், விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக 'தி ஃபேமிலி மேன்', 'கன்ஸ் அன்ட் குலாப்ஸ்' உள்ளிட்ட வெப் சீரியஸ்களையும் இயக்கியுள்ளார்.
ராஜ் நிடிமோரு
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ் நிடிமோரு.. அவர் எஸ்.வி.யு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்தார். அங்கு தான் இவர் தனது நண்பர் கிருஷ்ணாவை சந்தித்தார். அப்போது ஆரம்பித்த இவர்களின் நட்பு இப்போது திரைத்துறையிலும் தொடர்கிறது. பிடெக் படித்த பிறகு இருவரும் அமெரிக்கா சென்று உயர் கல்வியையும், பயிற்சியையும் தொடர்ந்தனர். திரைத்துறையிலும் கூட இருவரும் ஒன்றாகவே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இயக்குநர் ராஜ் நிடிமோருவின் நிகர மதிப்பு சுமார் ₹85 முதல் ₹89 கோடியாக இருக்கலாம் என டெய்லி ஜாக்ரன் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது சொத்துகள் குறித்த துல்லியமான தகவல்கள் பொதுவெளியில் அதிகம் இல்லை என்றாலும் அவரது திரைத்துறை பணிகள் மூலம் அவர் இந்த வருவாயை ஈட்டி இருக்கலாம் என தெரிகிறது.
சமந்தா மற்றும் ராஜ் இருவரும் தங்கள் திருமணத்தின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். அதில் சமந்தா ஒரு அழகான சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்தார். மறுபுறம், ராஜ் நிடிமோரு வெள்ளை நிற குர்தா, பைஜாமா மற்றும் க்ரீம் நிறப் பேன்ட் அணிந்திருந்தார். சமந்தாவின் நகைகள் குறிப்பாக அவரது நிச்சயதார்த்த மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காதல்
சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கடந்த ஓராண்டாக சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் ராஜ் உடன் எடுத்துக்கொண்ட பல படங்களை வரிசையாகப் பகிர்ந்து வந்தார். அப்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.
சமந்தா- ராஜ்
சமந்தா இதற்கு முன்பு பிரபலத் தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், இந்தத் திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2021ல் இந்தத் தம்பதி விவாகரத்து பெற்றனர். பின்னர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல ராஜ் நிடிமோருவும் தனது முன்னாள் மனைவி ஷ்யாமலி தேவியிடம் இருந்து 2022இல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications