ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பாங்க.. பாஜக கடும் விமர்சனம்
சென்னை: ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறுகையில், ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்பவன் முட்டாள்! நம்புகிறவன் காட்டுமிராண்டி! பரப்புவன் அயோக்கியன்! என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய கருத்துக்குத்தான் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் எதிர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.

வெற்றிமாறன்
அந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு வெற்றிமாறனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

எச் ராஜா
இதுகுறித்து எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவன் கோயில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவரா இல்லை பௌத்தரா என்பதை அந்த தற்குறியே சொல்லட்டும் என வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் நாம் தமிழர் கட்சியின் சீமான், வெற்றி மாறனுக்கு ஆதரவாகவே பேசியிருந்தார்.

சீமான் ஆதரவு பேச்சு
அவர் கூறுகையில் ராஜராஜ சோழனை இந்து மன்னர் என கூறுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. இது வள்ளுவருக்கு காவி பூசியது போல்தான். அந்த காலத்தில் நாடும் கிடையாது, மதமும் கிடையாது. அவர் சிவனை வழிபட்ட சைவ மரபினர் என்பது உலகிற்கே தெரியும் என சீமான் ஆதரவாக பேசியிருந்தார்.

பேரரசு கடும் விமர்சனம்
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு கூறுகையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா, இல்லை கிறிஸ்துவரா. ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்த போது இந்தியா மாகாணம் மாகாணங்களாக பிரிந்து கிடந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என சொல்கிறார்கள்.

பாஜக நாராயணன் திருப்பதி
இந்து மதம் ஒரு காலத்தில் சைவம், வைணவம் என பல மதங்களாக சிதறியிருந்தது. அதை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஆங்கிலேயர் இந்து மதம் என ஒரு பெயர் வைத்தார்கள். நீங்கள் இந்துக்கள் இல்லைல, அப்புறம் ஏன் இந்துக்கள் குறித்து பேசுறீங்க. சாமி கும்புடுறவங்க இதை பற்றி பேசட்டும் என கடுமையாக பேரரசு விமர்சித்த நிலையில் ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்பவன் முட்டாள்! நம்புகிறவன் காட்டுமிராண்டி! பரப்புவன் அயோக்கியன்! என தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications