இது ரொம்ப பெரிய தப்புங்க.. 46 ரூபாய்க்கு கரண்ட் வாங்குவதா? கோட்டை விட்ட மோடி அரசு! சிடிஆர் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் மின் தேவைக்காக 46 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்தது சர்ச்சையான நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை 46 ரூபாய்க்கு வாங்கி இருப்பது, மத்திய அரசின் திட்டமிடல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பதாக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக மின்வாரியம் டெண்டர் கோரியது. இந்த டெண்டரில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இறுதியில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை வழங்க ஒப்பந்தமும் போடப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்துனர்.

Rajasthan Electricity CTR Nirmal Kumar

மின்சார கொள்முதல்

மின்சாரத் தேவையை ஈடுகட்டவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதன் மூலம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

சிடிஆர் நிர்மல் குமார்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினை ஆற்றின. மேலும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஊழல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது .இதற்கிடையே குறுகிய கால தேவைக்கு மட்டுமே மின்சாரம் இந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், மின் உற்பத்திக்கு 25 ரூபாய் ஆகும் நிலையில் பல மாநிலங்கள் 30 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்வதாக விளக்கம் அளித்து இருந்தார் அமைச்சர் சிடிஆர்.

ராஜஸ்தான்

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் மின்சார தேவைக்காக ஒரு யூனிட் மின்சாரத்தை 46 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது. 330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின் நிலையத்தில் இருந்து இந்தியாவிலேயே அதிக விலையான 46 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. அக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் சுமார் 30 கோடி மதிப்பிலான மின்சாரத்தை ராஜஸ்தான் அரசு கொள்முதல் செய்திருந்தது.

மின்சார உற்பத்தி

இது தொடர்பாகத் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக மின்துறை அமைச்சரான சிடிஆர் நிர்மல் குமார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.46.09 செலவிடுவதாக வெளியாகியுள்ள தகவல், நாடு தழுவிய மின்சாரத் தேவை கணிப்பு மற்றும் மின்சார உற்பத்தி, விநியோகத் திட்டமிடல் தொடர்பாகப் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இது மத்திய மின்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய தவறாகும்.

மின்சாரத் தேவை

மத்திய மின்துறை அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, நாடு முழுவதும் நிலவும் மின்சாரத் தேவை மற்றும் மின் உற்பத்திக்கான வளங்கள் கிடைக்கும் நிலை குறித்து மாநில அரசுகளுக்குக் குறைந்த அளவிலேயே தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய பெரிய அளவிலான மின் தேவை-விநியோக இடைவெளி முன்கூட்டியே கணிக்கப்படாமல், அதற்கான திட்டமிடல் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பதை மத்திய மின்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய வேண்டும்.

மத்திய அமைச்சகம்

குறைந்தபட்சம் இப்போதாவது, நாடு தழுவிய மின்சாரத் தேவை கணிப்பு, மின் உற்பத்தித் திட்டமிடல் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மத்திய அமைச்சகம் வலுப்படுத்த வேண்டும். இதுபோன்ற முறையான திட்டமிடலும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைப்பும் இருந்தால், எதிர்காலத்தில் மாநிலங்கள் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலையைத் தவிர்க்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+