இன்ஸ்டாவில் 21 லட்சம் பாலோயர்ஸ்! தேர்தலில் கிடைத்த வாக்குகள் 33.. ராஜஸ்தான் பிரபலத்திற்கு வந்த சோதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட பிரபல ஜோதிடர் ஒருவருக்கு வெறும் 33 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் 11 வாக்குகள் அவரது குடும்பத்தினர் செலுத்திய வாக்குகளாம். இன்ஸ்டாவில் 21 லட்சம் பாலோயர்கள் வைத்து இருந்தும் தேர்தலில் 100 வாக்குகள் கூட பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் என்னதான் பிரபலமாக இருந்தாலும் தேர்தல் அரசியல் என வந்துவிட்டால் அது, களத்தில் உதாவது.. சமூக வலைத்தளம் வேறு.. எதார்த்த கள அரசியல் வேறு.. என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்லும் நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Rajasthan influencer 2 1 million followers on Insta but only Got 33 votes in the election

வெறும் 33 வாக்குகள் மட்டும்

அதாவது, இன்ஸ்டகிராமில் 21 லட்சம் பாலோயர்கள் வைத்து இருந்த ஜோதிடர் ஒருவர் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்து உள்ளது தெரியுமா? வெறும் 33 வாக்குகள்தான். குறைந்த வாக்குகள் பெற்றாலும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளார் அந்த ஜோதிடர். இது பற்றிய விவரங்களை பார்ப்போம்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் பிஷ்னோய். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள பிஷ்னோய் ஜோதிடராக உள்ளார். இவருக்கு யூடியூப், இன்ஸ்டகிராம், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் உள்ள புகழ் வெளிச்சத்துடன் ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் களத்தில் இறங்கியுள்ளார் பிஷ்னோய்.

வாக்குப்பெட்டியை திறந்த பிறகு தான்

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தோன் கி தானி-II கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஓம்பிரகாஷ் பிஷ்னோய் போட்டியிட்டார். அவருடன் சேர்த்து மேலும் 2 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 1,600 வாக்குகள் இருந்த நிலையில், எளிதாக வென்றுவிடலாம் என பிஷ்னோய் நினைத்துள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் பிஷ்னோயை விட்டால் வேறு யார் வெற்றி பெறுவார்கள் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தனர்.

இந்நிலையில், வாக்குப்பெட்டியை திறந்த பிறகுதான் அவர்களுக்கு பெரும் ஷாக் கிடைத்து இருக்கிறது. வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று பிஷ்னோய் தோல்வி அடைந்தார். இது குறித்து பிஷ்னோய் கூறுகையில், "நீங்கள் போட்டியிடுங்கள் வெற்றி நிச்சயம் என்று கிராம மக்கள் கூறினர். உங்கள் வெற்றியை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் கூறியிருந்தனர்.

நோட்டாவிற்கு 10 வாக்குகள்

ஆனால் வாக்குப்பெட்டியை திறந்த போது, எனக்கு வெறும் 33 வாக்குக்ள் மட்டுமே கிடைத்தது. நோட்டாவிற்கு 10 வாக்குகள் சென்றன. நான் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. பெரிய அளவில் வாகன அணிவகுப்புகளுடன் சென்று வாக்கு கேட்கவில்லை. சாதாரண வாகனத்தில் சென்றுதான் வாக்கு கேட்டேன். சமூக வலைத்தள பிரபலத்திற்கு கள ஆதரவுக்கும் வேறுபாடு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

33 வாக்குகளில் 11 வாக்குகள் எனது குடும்பத்தில் இருந்து வந்தது. ஏனைய வாக்குகள் என்னுடன் படித்தவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் போட்டுள்ளனர்" என்றார். தேர்தல் தோல்வியை பெரிதாக அலட்டிக்கொள்ளாத பிஷ்னோய், வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை தேர்தல் காட்டி கொடுத்துள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+