பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்பிய ராஜாத்தி அம்மாள்! அழைத்துச் சென்ற கனிமொழி!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறியதோடு விஜயகாந்த் படத்துக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விஜயகாந்த் மறைந்து 1 மாதத்திற்கு மேலாகியும் இன்னுமே அவரது இல்லம் தேடிச் சென்று பிரேமலதாவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜயகாந்த் மறைவின் போது வெளிநாடுகளில் இருந்த பலரும் ஊர் திரும்பியதும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கோ அல்லது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கோ சென்று அஞ்சலி செலுத்தி தங்கள் மரியாதையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜயகாந்த் மறைந்த தருணத்தில், மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மும்முரமாக இருந்தார் கனிமொழி. அங்கிருந்தவாறே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலும் அவர் குறித்த பழைய நினைவலைகளையும் கனிமொழி பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாதவர் விஜயகாந்த் என்றும் 75 பேருக்கு அவரது ஆஃபிஸில் வேலை தந்தவர் எனவும் கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
மேலும், தன் தாயார் ராஜாத்தி அம்மாள் மீது விஜயகாந்த் மரியாதை வைத்திருந்ததையும் அப்போது குறிப்பிட்டிருந்தார் கனிமொழி. சென்னை, தூத்துக்குடி, டெல்லி, என பிஸியாகவே ஓடிக்கொண்டிருந்த கனிமொழி, இன்று தனது தாயார் ராஜாத்தி அம்மாளை அழைத்துக் கொண்டு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரேமலதாவை சந்தித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய ராஜாத்தி அம்மாள், விஜயகாந்தின் ஆரம்பக்காலங்களில் அவர் கருணாநிதியோடு எந்தளவுக்கு நட்புறவு பேணினார் என்பது குறித்தெல்லாம் பழைய நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்தும் தனது கணவருக்கு என்னாச்சு, என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, என்பது குறித்தெல்லாம் ராஜாத்தி அம்மாளிடமும் கனிமொழியிடமும் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications