ஆஹா.. பிடிஆரை புகழ்ந்து தள்ளிய மாஜி அமைச்சர்.. என்னவா இருக்கும்.. வெள்ளை கொடிக்கு மறுபடியும் வேலையா?
பிடிஆர் செயல்பாடுகளை ராஜேந்திர பாலாஜி பாராட்டி உள்ளார்
சென்னை: திமுகவின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு நல்ல நாகரீகத்தை கொண்டுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார்.. இப்போதைய திமுக நிதி அமைச்சரின் செயல்பாடும் நன்றாக உள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே, அதிமுகவின் ஊழல் புகார்கள் குறித்து திமுக நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது..
ஆனால், 3 மாதங்களுக்கு முன்பிருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்ததால், அதிலேயே முழு கவனத்தை செலுத்த வேண்டியதாயிற்று.

பட்டியல்
தற்போது, மாஜிக்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன.. மதுரை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, என எட்டுத்திக்கும் 8 பேரை குறி வைத்துள்ளது திமுக என்றும் இதில் முதல் நபராக அடிபட்ட பெயர் ராஜேந்திர பாலாஜிதான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி பெயர் அடிபட்டதுமே திமுகவுடன் சமாதான நடவடிக்கையில் இறங்கினாராம் ராஜேந்திர பாலாஜி..

ஸ்டாலின்
மற்றொரு பக்கம், முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்றும் பாராட்டினார்.. "முதல்வரின் ஆரம்பமே அருமையாக உள்ளது, கடந்த ஆண்டுகளில் திமுகவினரின் உழைப்பு, திட்டமிடல் அனைத்தும் முக்கியமானது... தீவிர பிரசாரம், கடுமையான களப்பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார்கள். ஸ்டாலினின் உழைப்பை குறை சொல்ல முடியாது" என்று வெளிப்படையாக ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டியும் அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை..

சமாதானம்
சமாதான நடவடிக்கையாக வெள்ளைக் கொடி வேலை செய்யாத நிலையில், ஆவின் முறைகேட்டில் ஊழல் நடந்ததாக பட்டியல் வெளியிடப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இறுதியில், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணைகள் புத்துயிர் பெற்று அவருக்குத் தலைவலியாக மாறியிருக்கின்றன... கடந்த அதிமுக ஆட்சியிலேயே சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாகச் சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது...

பாஜக
நாலா பக்கமும் பிரச்சனைகள் சூழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் திடீரென டெல்லிக்கு சென்றிருந்தார்.. பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு, ஜேபி நட்டா, அமித் ஷா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது... மற்றொருபுறம் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் இந்த செய்தியை மறுத்திருந்தனர்.. அவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சில மூத்த வழக்கறிஞர்களை சந்திப்பதற்காகவே டெல்லி சென்றதாகவும் மரியாதை நிமித்தமாக பாஜக தலைவர்களை சந்தித்ததாகவும் விளக்கம் தரப்பட்டது.

தரிசனம்
அதற்கேற்றபடி, தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை முறையான விதிகளை பின்பற்றாமல் சென்னை ஹைகோர்ட் விசாரிப்பதாக, ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்திருந்தார்... இப்படி பல காரணங்களால், கடந்த சில தினங்களாகவே ராஜேந்திர பாலாஜி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தவர், திடீரென இன்னொரு பேட்டியை தந்துள்ளார்.

திருச்சி
கடந்த ஆட்சி காலத்தில் ஓரிரு கூட்டங்களுக்கு மட்டும் திருச்சிக்கு வருகை தந்த ராஜேந்திர பாலாஜி, நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் அதிமுகவினர் பெரும் வரவேற்பு கொடுத்திருந்தனர்.. தரிசனத்தை முடித்துக்கொண்டு தஞ்சைக்கு புறப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்றைய அரசியல் சூழல் நன்றாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது... திமுகவின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு நல்ல நாகரீகத்தை கொண்டுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார்.. இப்போதைய திமுக நிதி அமைச்சரின் செயல்பாடும் நன்றாக உள்ளது" என்றார்.

எதற்கான பாராட்டு?
கடந்த காலங்களில் திமுகவை அதிகமாக திட்டி தீர்த்தது ராஜேந்திர பாலாஜிதான்.. தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து பொதுவெளியில், சபை நாகரீகம் மறந்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியதும், அதுவும் ஸ்டாலினை ஒருமையில் திட்டியதும் ராஜேந்திர பாலாஜிதான்.. இப்போது திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அதிகமாக பாராட்டி கொண்டிருப்பதும் சாட்சாத் ராஜேந்திர பாலாஜியேதான்..!
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications