Exclusive: நாங்க ஒன்னும் அடிமை இல்ல.. அண்ணா இல்லாமல் அதிமுக இல்லை! அடித்துச் சொல்லும் கேடிஆர்!
சென்னை: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்தும் பெரியார் குறித்தும் அவதூறாக வீடியோ வெளியிட்ட நிலையில், அதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாநாடு முடிந்த பின்பு தான் தங்களுக்கு அது பற்றி தெரியும் எனவும், அண்ணாவை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் எனக் கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்ட காணொளியில் அண்ணா, பெரியார் குறித்து அவதூறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்ட நிலையில் கட்சியின் முன்னோடிகளான அண்ணாவையும் பெரியாரையும் விமர்சித்ததை அதிமுகவினர் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் எனவும், பாஜகவுக்கு அவர்கள் அடிமையாக மாறிவிட்டதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில் மாநாட்டில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது அடுத்த நாள் தான் தங்களுக்கு தெரியும் எனவும் அண்ணாவை எந்த காலத்திலும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் எனக் கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி. இது தொடர்பாக ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்த அவர்," நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் எல்இடி திரை அமைக்கப்படவில்லை. அதனால் அங்கு என்ன ஒளிபரப்பப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது.
அடுத்த நாள் வீடியோவை பார்த்த போது தான் எங்களுக்கே தெரியும். அது தேவையில்லாதது. அதனால்தான் இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது முதன் முதலாக அதிமுக சார்பாக நான் பேசினேன். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தும் அதுதான். எங்களைப் பொறுத்தவரை எங்கள் தலைவர்களை யார் அவதூறாக பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
அண்ணாவின் உருவத்தை அதிமுக கொடியில் வைத்திருக்கிறோம். அண்ணாவின் பெயரை தினமும் உச்சரிக்கிறோம். அவர் பெயருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்ச்சியில் மட்டும் தான் நாங்கள் கலந்து கொள்வோம். அண்ணாவின் பெயருக்கு சிறுமை ஏற்படுகிறது என்றால் அதனை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம். நிகழ்ச்சியில் அண்ணா குறித்து இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது எங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நாங்கள் அப்போதே கண்டித்திருப்போம்.
மேலும் ஏதோ ஒரு அமைப்பு செய்கிறது என்றால் அந்த அமைப்புக்கு நாங்கள் என்ன அடிமையா? அந்த கட்சிக்கு நாங்கள் அடிமையா? அண்ணாவை விட்டுக் கொடுத்துவிட்டு அதிமுகவை நடத்த முடியாது. அதிமுக குறித்து திமுக விமர்சித்து வருகிறது. திமுகவின் கொள்கை என்ன? திமுகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் முரண்பட்ட கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லையா ?
முருக பக்தர்கள் அனைவரும் இந்துக்கள்.. இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என திரட்டுவதால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுவார்கள் என திமுக சொல்கிறது. இந்துக்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இஸ்லாமியர்கள் என பிரித்து சிறுபான்மை வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற வேண்டும் என்பதுதான் சில கட்சிகளின் எண்ணம். ஆனால் இந்துக்களின் ஓட்டுகள் பிரிந்து தான் இருக்கிறது. அதை ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக கூட்டணியில் பாஜக 50 தொகுதிகள் 60 தொகுதிகள் கூட கேட்கலாம்.. ஏன் 100 தொகுதிகள் கூட கேட்கலாம்.. ஆனால் நாங்கள் தான் கொடுக்க வேண்டும். அதிமுக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்.. ஆனால் தமிழகத்தை ஆள அதிமுகவால் மட்டுமே முடியும்" என கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜியின் விரிவான பேட்டியை ஒன்இந்தியா அரசியல் யூட்யூப் சேனலில் காணலாம்..
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ!












Click it and Unblock the Notifications