உங்க பாரமே குறைஞ்சுடும்.. தீராத வீட்டுக் கடனை விரைவாக அடைப்பது எப்படி? 7 எளிய வழிமுறைகள் இதான்
சென்னை: வீட்டுக் கடனை விரைவாக அடைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார் பொருளாதார ஆலோசகர் ராஜேஷ்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "வீட்டுக்கடனை விரைவாக அடைக்க வேண்டுமா? கீழ்கண்ட வழிமுறையில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.

கடன் தொகை: ₹50 லட்சம்.
வட்டி: 8% (உதாரணத்திற்காக)
கடன் காலம்: 25 வருடங்கள்.
எந்த வழிமுறையையும் பின்பற்றவில்லையென்றால்:
கடன் அடைக்கும் காலம்: 25 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹65 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹0
வருடத்திற்கு ஒரு EMI கூடுதலாக கட்டுங்கள். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 19 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹48 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹17 லட்சம்
ஒவ்வொரு வருடமும் EMI தொகையை 5% கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 13 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹31 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹34 லட்சம்
ஒவ்வொரு வருடமும் EMI தொகையை 10% கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 10 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹23 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹42 லட்சம்
ஒவ்வொரு வருடமும் ₹1 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 20 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹39 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹27 லட்சம்
ஒவ்வொரு வருடமும் ₹2 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 16 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹28 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹37 லட்சம்
ஒவ்வொரு வருடமும் ₹5 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 11 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹17 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹49 லட்சம்
நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் அமர்ந்து, பேசி, உங்களால் மேற்கண்ட வழிகளில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விரைவாக கடனை முடிக்கலாம். "சொல்றது ஈசியா சொல்லிடுறீங்க, வர்ற வருமானம் செலவுக்கே சரியாக இருக்கே" என்று கூறுபவர்களுக்கு.. உங்கள் வருமானத்தை உயர்த்துங்கள் - வேறு வேலை தேடலாம், side income ஏதாவது ஈட்ட முயற்சிக்கலாம், freelancing மூலம் வருமானம் ஈட்டலாம். செலவுகளை குறையுங்கள். தேவையற்ற செலவுகளை குறையுங்கள். சிறிது காலம் தான் சிரமப்பட வேண்டும். அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழலாம்.
Personalized recommendations (வீட்டுக் கடனை விரைவாக அடைக்க) தேவைப்படுவோர், DM (மெசேஜ்) மூலம் தொடர்பு கொள்ளலாம். உங்களது வருமானம், செலவினங்களை கணக்கில் கொண்டு, எப்படி சீக்கிரம் கடனை அடைப்பது என்கிற வழிமுறைகளை சொல்லித் தருகிறேன். இது முற்றிலும் இலவச சேவை. இதற்கு நீங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications