நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜகவை போட்டுத் தாக்கிய ராஜேஷ் குமார்! உடனே சண்டைக்கு வந்த தமிழிசை!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேர் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக மீது குற்றம் சாட்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் இன்று தமிழக சட்ட சபையில் அவரது அரசுக்கு நம்பிக்கை கூறும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் விஜய் தனது அரசுக்கு ஆதரவு கோரி பேசிய நிலையில் முதலாவதாக காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்தது.

அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமார்," விஜய் மதச்சார்பற்ற கட்சிகளும் மட்டும்தான் ஆதரவு கோரி இருக்கிறார். பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் நிலைநிறுத்த பாஜக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இது மக்களின் தீர்ப்பு. தமிழ்நாட்டை பாஜக மறைமுகமாக ஆட்சி செய்யக்கூடாது என்பதற்காக ஆதரவு கொடுத்து இருக்கிறோம். இந்த மண்ணில் வெறுப்பு அரசியலை ஆதரிக்க மாட்டோம். தமிழ்நாட்டில் பாஜக நுழைந்து விடலாம் என்ற கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பெயரில் ஆதரவு தருவோம், உடன் இருப்போம்" என்றார்.
இந்த நிலையில் பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி இருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இன்று முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் ... வேறு எந்த கட்சியும் ஆதரவை நினைப்பதற்கு முன்னாலேயே அவசர அவசரமாக சென்று ஆதரவை தெரிவித்து விட்டு தங்களது பதவி ஆசைக்காக அதுவரை இருந்த கூட்டணியை உடனே முறித்துக் கொண்டு இன்று பாஜக மறைமுகமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தது என்றும் ஆளுநர் ஆட்சி கொண்டுவர முயற்சி என்று தொடர்ந்து அவர் முதற்கொண்டு மற்றவர்களும் சொல்லுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சுயநலத்திற்காக பல முடிவுகள் எடுத்துவிட்டு அதற்கு உள்நோக்கத்தோடு மறுபடியும் இல்லாத ஒரு கருத்தை பதிவு செய்வது அதுவும் பாஜக மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. ஆக இவர்கள் இன்றும் பாஜகவை பற்றி பார்த்து எவ்வளவு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. மதம் சார்புள்ள நடவடிக்கைகளை ஆதரித்துக் கொண்டு ஆனால் மதம் சார்பற்றவர்கள் என்று இவர்களை அவர்களே முத்திரை குத்தி கொள்வார்கள்.
அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஆக இன்று சட்டமன்றம் ஒற்றுமையை பதிவிடாமல் வேற்றுமையையும் வேறுபாட்டையும் விதைக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை நேற்று நடந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம்... மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர இதே போல அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல.. வருங்கால தமிழகம் இதை உணர்த்தும்.. அவரைத் தொடர்ந்து பேசி வரும் மற்றவர்களும் இதே கருத்தை சொல்வது கண்டிக்கத்தக்கது" என கூறியுள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications