நடிகர் ரஜினி எப்போது அரசியல்வாதி ரஜினி ஆவார்? பரபர கேள்விக்கு ரஜினியின் பதில் என்ன தெரியுமா?
எப்போது தீவிர அரசியலில் ஈடுபட போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதில் அளித்து இருக்கிறார்.
சென்னை: சினிமாவில் தீவிரமாக நடிப்பதை போலவே, எப்போது தீவிர அரசியலில் ஈடுபட போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதில் அளித்து இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் நேற்று அதிகாலை வெளியானது. நேற்று காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் இருந்து திருப்பிய பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த மாதம் இறுதியில் நடிகர் ரஜினிகாந்த அமெரிக்கா சென்று இருந்தார். இரண்டு வாரம் அங்கே இருந்தவர் நேற்றுதான் சென்னை வந்தார்.
நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்.
அனைத்து பெருமையும் கார்த்திக் சுப்புராஜையே சேரும். ரசிகர்களின் சந்தோஷமே தனது சந்தோஷம். அவர்கள் படத்தை பார்த்து மகிழ்வது பிடித்துள்ளது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள், என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் எப்போது அரசியவாதியாவார், எப்போது தலைவராவார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை கேட்டவுடன் கொஞ்சம் ''ஜெர்க்'' ஆன ரஜினி, ''அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம், நன்றி'' என்று குறிப்பிட்டார். இதனால் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications