அதெல்லாம் ரஜினியின் பிரைவசி.. உங்க தனிப்பட்ட விவகாரத்தை விளக்குவீர்களா?.. கஸ்தூரிக்கு ஃபேன்ஸ் நச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு எந்த சிகிச்சைக்காக சென்றுள்ளார் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டதை அடுத்து அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? மருத்துவ பரிசோதனை என்றால் இந்தியாவில் இல்லாத மருத்துவமனையா?

அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை, இதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடல்நல பரிசோதனை

உடல்நல பரிசோதனை

உடல்நலம், மருத்துவ பரிசோதனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம், அதை ஏன் உங்களிடம் ரஜினி விளக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை நாங்கள் கேட்டால் நீங்கள் சொல்வீர்களா என்றும் பலர் கேட்டுள்ளார். அவ்வாறு கஸ்தூரிக்கு வந்த ட்வீட்களில் இருந்து சில வாசகர்களுக்காக:

அமெரிக்க மருத்துவமனை

இந்திய மருத்துவமனைகளை விட அமெரிக்க மருத்துவமனைகளை ரஜினிகாந்த் விரும்புவதற்கு காரணம் அவரது தனியுரிமையை பாதுகாக்க நினைப்பதால்தான். இந்தியாவில் ரஜினிகாந்த் செல்லும் இடங்களுக்கு மீடியாவே செல்ல முடியாத இடம் என ஒன்று உள்ளதா என கூறுங்கள். ஒருவருடைய மருத்துவ காரணங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசுவது தனிநபர் உரிமையை மீறும் செயலாகும். இது சட்டவிரோதமானது என்கிறார் இந்த வலைஞர்.

மாநில அரசு

மத்திய, மாநில அரசுகளால் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் நிறைய இருக்கின்றன. நீங்கள் பாரபட்சம் இல்லாமல் செயல்படும் பெண் என்றால் அதுகுறித்து கேள்வி கேளுங்கள். அதுதான் இப்போதைய தேவையும் கூட. மத்திய அரசின் அனுமதியை பெற்றே ரஜினி சென்றிருப்பார் என்கிறார் வலைஞர்.

அமெரிக்கா

அமெரிக்காவுக்கு செல்ல ரஜினி எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நேராக அமெரிக்க குடியேற்ற அலுவலகத்தை கேளுங்கள், ரஜினியை அல்ல. அனுமதி கேட்டார், அவருக்கு அனுமதி கிடைத்தது, பறந்துவிட்டார். விளம்பரத்திற்காக இது போல் ட்வீட் போடுவதை விட்டுவிடுங்கள் என்கிறார் இந்த வலைஞர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+