ரஜினி எழுந்து நின்று கைதட்டிய ‘கில்லி’ விழா! அன்று நடந்தது என்ன? இயக்குநர் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை தொடங்கி வைத்திருக்கிறது விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து அந்தப் படம் ஒரு புதிய படத்திற்கு இணையாக ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக் கொண்டு வந்துள்ளது.

'கில்லி'யைப் பார்த்த உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். அதை வைத்து அஜித் ரசிகர்கள் 'தீனா' ரீ- ரிலீஸ் வெடியைப் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் படங்களிலேயே ஆக்ஷன் கலந்த மாஸ் திரைப்படம் 'கில்லி'. அது செய்த வசூலை வைத்து சிலர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் வருகின்றன.
அப்படி மறக்க முடியாத திரைப்படமாக அமைந்த 'கில்லி' ரீ ரிலீஸ் பற்றிப் பல தகவல்களை இப்போது வெளிப்படுத்தி வருகிறார் இயக்குநர் தரணி.
அவர் படம் ரீ ரிலீஸ் ஆகப் போகிறது என்று சொன்ன போது 2 நாள் ஓடும் என்றே நினைத்திருக்கிறார். இந்தளவுக்கு வசூல் மன்னனாக மாறும் என்பதைத் தான் கணிக்கவே இல்லை என்று ஓபனாக கூறி இருக்கிறார்.

மேலும் படம் பற்றிய பல மலரும் நினைவுகளைத் தரணி பேசி இருக்கிறார். படம் ரீ ரிலீஸ் பற்றி அவர், "நாங்க 'கில்லி'க்காக லைட் ஹவுஸ் அமைக்கத் தனியாக செட் போட்டோம். அந்த லைட் ஹவுசில் இருந்து கேமராவை வைத்து எடுப்பது ரொம்ப கஷ்டம். ஆகவே வேற வேற செட் போட்டு எடுத்தோம். அப்புறம் இதுவரை எங்கேயும் சொல்லாத ரகசியம் ஒன்று இருக்கிறது.
லைட் ஹவுஸ் செட் போட்டு, அந்த உயரத்திற்கு மிகப் பெரிய லைட்டை எடுத்துப் போகக் கீழே இருந்து சாரம் கட்டினோம். செம வெயிட் அந்த லைட். கிட்டத்தட்ட 200 அடி உயரம். அந்த உயரத்திலிருந்து வயர் போட்டு, அந்த லைட்டை சுற்ற விட்டோம். மேலேயே அதற்காக ஒரு ஆபரேட்டரை தனியாக வேலைக்கு அமர்த்தினோம். இல்லை என்றால், அந்த ஷாட் சாத்தியமே இல்லை.
கரும்புத் தோட்டம் ஃபைட் சீன் கூட அப்படித்தான். கஷ்டப்பட்டு எடுத்தோம். நான் எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை ஸ்டோரி போடு எழுதி முடித்த பிறகுதான் ஸ்பாட்டுக்கே போனேன்.
என்ன சீன்? என்ன லொக்கேஷன்? எப்படி ஃபிரேம் எல்லாம் பக்காவா நானே யோசிச்சு யோசிச்சு எழுதிடுவேன். காமெடி காட்சிகளுக்கு கூட ஸ்டோரி போடு இல்லாமல் ஷூட் பண்ணவே மாட்டேன்.

தெலுங்கில் வந்த 'ஒக்கடு' செம கிளாசிக் மூவி. அதில் அத்தனை பாடல்களும் மெலடி. அதில் உள்ளதை அப்படியே எடுக்கவில்லை. தெலுங்கில் அப்பா பையன் உறவே வேற மாதிரி இருக்கும்.
ஆனால் தமிழில் நாங்கள் அந்த அப்பா பையன் உறைவைக் கொஞ்சம் துடுக்குத் தனமாக மாற்றினோம். விஜய்யிடம் முதல் நாள் கதை சொல்லும் போதே, 'இதில் நீங்க ஹீரோ இல்லை. நெக்ஸ்ட் டோர் பாய். ஆகவே கொஞ்சம் காமெடி சீன்ஸ் எல்லாம் வைத்துள்ளோம்' என்பதைச் சொல்லிவிட்டேன். அதற்கு ஏற்ற மாதிரி அவர் புதுசா காமெடி சீன் பண்ணி இருப்பார்.
அதற்கு ஏற்ற மாதிரி அதை அப்படியே பிடித்து காமெடி பண்ணார் விஜய். என் மனதில் 'தம்பிக்கு எந்த ஊரு' ஸ்டைல் காமெடிகள் மனதிலிருந்தன. அதை சொன்னேன். அவர் உடனே அதை பிக் அப் செய்து கொண்டார்.
சிறந்த நடிகர் விஜய். ஆக்ஷன் காட்சிகள் நடிப்பதற்காகக் கூடுதலாக சில நாள்கள் கேட்டு செய்தார். கிளைமேக்ஸ் சீன் ஒரு நாள் கூடுதலாக எடுத்து கொண்டு செய்தார். அந்த ஃபர்பெக்ஷனை படத்தில் பார்க்க முடியும்.
இந்தப் படம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஓடுகிறது என்றால் அதில் உள்ள கதாபாத்திரங்களின் அமைப்பு. அந்தக் கதை. அப்புறம் ஸ்கிரின் ப்ளே. அதற்காக உழைத்த அத்தனை டெக்னிஷீயன்ஸ். அவங்க இல்லை என்றால் இந்தப் படமே இல்லை.
இதை 'கில்லி' விழாவில் கூட நான் சொன்னேன். அதற்கு எழுந்து நின்று ரஜினி கை தட்டினார். இப்படி சகலமும் பாசிட்வ் வைப் சேர்ந்தது அமைந்த படம் தான் 'கில்லி'.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல்












Click it and Unblock the Notifications