கமல் செய்யாத சாதனையா? ரஜினி பாஜகவின் நண்பர்.. அதனால்தான் விருது தராங்க.. சீமான் கிண்டல்!
ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சினிமாதுறையில் இத்தனை ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு விருது வழங்கி இருக்கிறது. அவருக்கு 'ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி' என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ளது.
கோவாவில் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விருது தொடர்பாக திரைத்துறையினர், அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீமான் பேட்டி
இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அதை சாதனைக்காக வழங்கியது போல தெரியவில்லை. சினிமாவில் சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் பலர்
ரஜினியை விட சினிமாவில் சாதித்த பலர் இருக்கிறார்கள். கமல் 60 ஆண்டு காலம் கலை உலகில் சாதித்துள்ளார். கமல் போல சினிமா உலகில் புரட்சிகளை யாரும் செய்யவில்லை. ஆனால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

இல்லை
திரைத்துறையில் ரஜினியை விட அனுபவம் வாய்ந்தவர்கள், சாதித்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை. பாரதிராஜா, இளையராஜா போன்றோர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் மத்திய அரசு விருது அளிக்கவில்லை.

காரணம்
ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது. ரஜினிகாந்த் அவர்களுக்கு வேண்டப்பட்டவர். அரசியல் திட்டங்களை கருத்தில் கொண்டு பாஜக அவருக்கு விருது வழங்கி இருக்கிறது, என்று சீமான் கூறியுள்ளார்
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications