ரஜினி என் நண்பர்... சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் ஆதரவு கேட்பேன் - கமல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டசபை தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கேட்கப்போவதாக கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ரஜினி எனது நண்பர் என்றும், எல்லோரிடமும் ஆதரவு கேட்கும் போது அவரிடம் மட்டும் கேட்காமல் இருப்பேனா என்றும் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கிய கமல்ஹாசன் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழக அரசின் பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர்.
இன்னும் 8 ஆண்டுகள் அரசுப் பணி இருந்தபோதும் மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார்.
வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலோடும் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.
மிகச்சரியான முடிவினை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபுவை மனதாரப் பாராட்டுகிறேன். அவரை பொதுச் செயலாளர் - தலைமை அலுவலகம் நியமித்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர், இதிலும் தடம் பதிப்பார் என்பதில் ஐயம் இல்லை என்று கூறினார் கமல்ஹாசன்.
அப்போது கமலிடம், சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?, ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications