எங்களை யாரும் தொடமுடியாது… ரஜினி,கமல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் தில்லான பதில்
சென்னை : கிட்டத்தட்ட 45 முதல் 50 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ள அதிமுகவை யாரும் தொடமுடியாது. அதுவே நிதர்சனமான உண்மை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ரஜினி, கமல் பற்றி எந்த கட்சிகள் கவலைப்படுகிறதோ... இல்லையோ... சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் அதிமுக அமைச்சர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, பிரஸ் மீட் புகழ் ஜெயக் குமார், கடம்பூர் ராஜூ என ஒவ்வொருத்தரும் கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.

யார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் சொல்லி வந்தாலும் தொடர்ந்து ரஜினி, கமல் மீது எதிர்ப்பான கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி டிவி சேனல் ஆரம்பித்தால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்று கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது :
ரஜினிகாந்த் டிவி சேனல் ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. எங்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 45 முதல் 50 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிமுகவுக்கு உள்ளது.
இந்த 50 சதவீத ஓட்டை யாரும் தொடமுடியாது. இதுவே நிதர்சனமான உண்மை. ரஜினிகாந்த் டிவி சேனல் ஆரம்பிக்கிறார், கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது திமுகவும், மற்ற கட்சிகளும் தான்.
அதேபோல் கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நின்றால் திமுக ஓட்டுகளை அல்லது மற்ற கட்சிகளின் ஓட்டுகளை தான் பிரிப்பார். எங்கள் ஓட்டுகளை அவர் கை வைக்கவே முடியாது.
எங்களுடைய ஓட்டு வங்கி என்பது 50%. அது முழுமையாக எங்களுக்கு தான் வரும். எனவே எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும்.
கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும்.
கஜா புயலை பொறுத்த வரையில் தமிழக அரசு தனது கடமையை 100 சதவீதம் செய்துள்ளது. கஜா புயல் நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து நிச்சயமாக கேட்டுப்பெறுவோம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications