ராகவேந்திரா மண்டபம் செல்லாத ரஜினிகாந்த்.. வீட்டிலேயே வீடியோ கான்பிரன்ஸ்.. அட ஆரம்பமே இப்படியா?

இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்த நடிகர் ரஜினிகாந்த், செயலாளர்களை சந்திக்க நேரில் செல்லாமல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்த நடிகர் ரஜினிகாந்த், செயலாளர்களை சந்திக்க நேரில் செல்லாமல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ரஜினிகாந்த் பத்திக்கையாளர் சந்திப்பு

    நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று ரஜினிகாந்த் அவரின் அரசியல் திட்டம் , வருகை குறித்து பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இன்று நடிகர் ரஜினி மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். காலை 8 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 38 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக நேற்று மாலையே மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் சென்னை வந்துவிட்டனர். அவர்கள் சென்னையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை எல்லோரும் சரியாக 7.30 மணிக்கே கூட்டம் நடக்கும் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தனர். 8 மணிக்கு ஆலோசனை தொடங்கியது.

    ஆலோசனை என்ன

    ஆலோசனை என்ன

    ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது கலந்து கொள்வார் என்று எல்லோரும் தீவிரமாக எதிர்ப்பார்த்தனர். ரஜினியை காண்பதற்காக தீவிரமாக ரசிகார்கள் கூட்டம் நடக்கும் இடத்தில் காத்து இருந்தனர். ஆனால் ரஜினி ஆலோசனை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள மாட்டார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மட்டுமே பேசுவார் என்று கடைசி நேரத்தில் கூறப்பட்டது.

    எங்கே மண்டபம்

    எங்கே மண்டபம்

    ராகவேந்திரா மண்டபம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே, ரஜினிகாந்த் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினார். சுமார் 45 நிமிடம் மட்டுமே இந்த ஆலோசனை நடந்தது. இதில் அங்கு இருந்த 38 மாவட்ட செயலாளர்களில் 8 மாவட்ட செயலாளர்கள் மட்டும் பேசினார்கள். மற்றவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை . அதன்பின் மீட்டிங் முடித்துவிட்டு ரஜினிகாந்த் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.

    ஹோட்டல்

    ஹோட்டல்

    வீட்டில் இருந்து நேரடியாக லீலா பேலஸ் ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். தூரம் கருதி அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி உள்ளார். அவரின் வீட்டிற்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு பெரிய தூரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று மீட்டிங்கில் ரஜினியை பார்க்கக் வேண்டும் என்று ஆர்வமாக வந்த ரசிகர்கள் இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+