ரஜினிகாந்த் பிரஸ் மீட்.. காலை 11 மணி.. நேரம் குறித்தார்.. என்ன சொல்லப் போகிறார்?
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நிறைய கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்த றிவிப்பு எதுவுவம் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்

ஆனால் ஆலோசனை
ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் முக்கிய விஷயம் ஒன்றில் ஏமாற்றம் அடைந்ததாக குறிப்பிட்டார். தனக்கு ஒரு மன வருத்தம் இருக்கிறது, செயலாளர்கள் எல்லோரும் திருப்தியாக இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். தன்னுடைய மனவருத்தம் குறித்து பின்பு தெரிவிப்பேன். இப்போது கூற முடியாது என்று ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

கூட்டம் எப்படி
இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வெறும் 7 நாட்கள்தான் ஆகிறது. தற்போது மீண்டும் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி எப்படி
கட்சி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான விஷயங்களை பேச வேண்டும் என்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

என்ன சொல்வார்
நாளை காலை 11 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதில் தனது அரசியல் திட்டம் என்ன, எதிர்கால பிளான் என்ன என்பது குறித்து பேசுவார் என்கிறார்கள். அதேபோல் தனக்கு வருத்தம் கொடுத்த அந்த விஷயம் என்ன என்றும் அறிவிப்பு வெளியிடுவார் என்கிறார்கள். ரஜினிகாந்த் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்த அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications