கமல்ஹாசனை அலுவலகம் சென்று சந்தித்த ரஜினிகாந்த்.. 20 நிமிடம் நீடித்த கலகல உரையாடல்!
நேற்று இரவு நடிகர் ரஜினி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்தார்.
Recommended Video

சென்னை: நேற்று இரவு நடிகர் ரஜினி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்தார். தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக கமல்ஹாசனுக்கு ரஜினி பத்திரிக்கை அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யாவின் திருமணம் வரும் 11ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணம் கொஞ்சம் எளிமையான முறையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய நபர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதை முன்னிட்டு நடிகர் ரஜினி முக்கியஸ்தர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார். நேற்று முதல்நாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி, திருமண அழைப்பிதழை வழங்கினார்.
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் அவர் திருமண அழைப்பிதழை அளித்தார். இன்னும் சில முக்கியமான தலைவர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் ரஜினி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்தார். நேற்று இரவு 8 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கி இருப்பதாலும், நடிகர் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாலும் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications