Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#மக்கள்சேவையில்_RMM ... டுவிட்டரில் டாப் டிரெண்ட்டிங்.. இதற்குத்தான்.. கலக்கும் ரஜினி ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினி காந்தின் ரசிகர்கள் இன்று காலை முதல் #மக்கள்சேவையில்_RMM என்ற் ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டாப் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அந்த ஹேஷ்டாக்கில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் செய்து வரும் பொதுச் சேவைகளை பட்டியலிட்டு வருகிறார்கள்.

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் இன்னமும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. அதேநேரம் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அத்துடன் தனது மன்றத்தை பட்டி தொட்டி எங்கும் வரை விரிவுப்படுத்தும் பணிகளையும் சத்தம் இல்லாமல் செய்து வருகிறார்கள்.

பொதுமருத்துவ முகாம்

பொதுமருத்துவ முகாம்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரஜினியின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டம் சார்பாக அண்ணா நகர் பகுதி ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் , கண் சிகிச்சை முகாமை அரும்பாக்கத்தில் உள்ள கமலாம்மாள் திருமண மண்டபத்தில் இன்று நடத்தினர்.

ஹேஷ்டேக் டிரெண்ட்

ஹேஷ்டேக் டிரெண்ட்

இது தொடர்பாக டுவிட்டரில் #மக்கள்சேவையில்_RMM என டிரெண்ட் ஆகிய நிலையில் அடுத்தடுத்து டுவிட்டரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்து வரும் நற்பணிகளை பட்டியலிட்டு டிரெண்ட் ஆக்கினர்.

டாப் சென்னை டிரெண்ட்

டாப் சென்னை டிரெண்ட்

கிட்டத்தட்ட சில மணி நேரத்தில் 24 ஆயிரம் டுவிட்டுக்கு மேல் வந்துள்ள நிலையில் சென்னை டுவிட்டர் டிரெண்டிங்கில் #மக்கள்சேவையில்_RMM இன்று மதியம் முதல் இடத்தில் இருந்தது.

பள்ளியை சீரமைத்தல்

பள்ளியை சீரமைத்தல்

அரசியலுக்கு வரப்போகும் தங்கள் தலைவரின் வழியில் அமைதியாக பல மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்கள் . பள்ளிக்கூடங்களை தத்தெடுப்பது, நலிந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி பயில உதவித்தொகை வழங்குவது, தண்ணீர் இல்லாத பகுதிக்கு தண்ணீர் லாரி அனுப்புவது உள்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள்.

அவர்களின் டுவிட் பதிவுகளை கீழே காணலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+