யாருன்னு பாருங்க.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்த சீனிவாசன், விஜயலட்சுமி.. லிஸ்ட் நீளுமாம்
சென்னை: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவின் மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து, இத்தனை நாட்களாக நடத்தி வந்த ரஜினி மக்கள் மன்றத்தையும் சமீபத்தில் கலைத்துவிட்டார்.

முக்கிய நிர்வாகிகள்
இந்த நிலையில்தான், முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் மத்திய சென்னையின் 3 மாவட்ட செயலாளர்களும், கோயமுத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் மத்திய சென்னையைச் சேர்ந்த மகளிர் அணி செயலாளர்கள் இணைந்தனர். இத்துடன் வர்த்தக அணி, வழக்கறிஞரணி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் இணைந்தனர்.

ஏமாற்றம்
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்த சீனிவாசன் : ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காது தங்களுக்கு ஏமாற்றம் எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்குவார் என்று நாங்கள் செய்த பணியை திமுகவிடம் தொடர்வோம் என்றார்.
Recommended Video

பலர் இணைவார்கள்
மேலும் ரசிகர் மன்றத்தில் இருந்து இன்னும் பல நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர் என்றார். காஞ்சிபுரம் மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்த விஜயலட்சுமி பேட்டியளிக்கையில், பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என தேர்தல் வாக்குறுதியை விரைவாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். சட்டமன்றத்தில் அரியணை ஏறியது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் களப் பணிகளை செய்து திமுகவை வெற்றி அடையச் செய்வோம் என தெரிவித்தார்.

முதல் சாய்ஸாக இருக்கும் திமுக
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி அறிவித்தார். அப்போது அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் கூட பெரும்பாலான ரசிகர்கள் அதன்பிறகு திமுகவில் சேர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அல்லது பாஜகவில் அதிகம் பேர் சேரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications