"வெயிட் பண்ணுங்க.. காவலர்கள் காத்திருங்க.." ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    கட்சி குறித்து வெளியான தகவல்.. அறிக்கை வெளியிட்ட Rajini மக்கள் மன்றம் | Oneindia Tamil

    இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் தகவல் பரவியது.

    அந்த கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள இடம் சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள ஒரு வீடு ஆகும். அங்கு சென்று பார்த்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஒருவர் அங்கு வசித்து வருவது தெரியவந்தது.

    ரஜினி மக்கள் மன்றம்

    ரஜினி மக்கள் மன்றம்

    இந்த நிலையில்தான் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சுதாகர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம்பெற்றிருந்த கட்சியின் பெயர், சின்னம், ரஜினி மக்கள் மன்றத்திற்கு உடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    காத்திருங்க

    காத்திருங்க

    தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சி பெயர் அதேதானா

    கட்சி பெயர் அதேதானா

    இந்த அறிக்கையை வைத்து பார்த்தால் கட்சி பெயர் அதுதான்.. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் என்று சொல்லும் தொனியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

     ரஜினிகாந்த் உடல்நிலை

    ரஜினிகாந்த் உடல்நிலை

    ஏற்கனவே ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. பிறகு அது பற்றி விளக்கம் அளித்த ரஜினிகாந்த்.. அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும் அந்த அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் உண்மை என்று கூறியிருந்தார். இப்போது கட்சி பெயரையும் அதேபோலத்தான் சொல்கிறார்களா என்ற ஐயப்பாடு அனைவருக்கும் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+