லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் ரஜினி வைத்த பன்ச்!
Recommended Video

சென்னை: லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும் என்று ரஜினிகாந்த் சொன்னதை கேட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். ஆனால் இதுநாள் வரை அவர் கட்சியை தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் சிறிது கவலைக்கொள்ள தொடங்கினர்.
அம்பு விடுவதுதான் பாக்கி என்று கூறிய ரஜினி சமீபகாலங்களில் 90 சதவீத வேலை மட்டுமே முடிந்துள்ளதாக கூறினார். இது ரசிகர்களுக்கு மேலும் மன வேதனையை கொடுத்தது.

ஏதாவது இருக்கா
பெரும்பாலும் ரஜினி கலந்து கொள்ளும் விழாக்களில் அவரது பேச்சை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிப்பர். அதிலும் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியதை தொடர்ந்து அவரது பேச்சுகளில் அரசியல் குறித்த சேதி ஏதாவது இருக்கா என ரசிகர்கள் எதிர்பார்ப்பர்.

லேட்டாக வந்தாலும்
அந்த வகையில் ரஜினியின் 2.0 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அப்போது ரஜினி பேசுகையில் 2.0 திரைப்படம் ஏன் லேட்டுனு எல்லாரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும் என்று ரஜினி சொன்னார்.

ஆரவாரம்
உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட ரஜினி நான் படத்தை சொன்னேன் என்றார். அதற்கு விசில் பறந்தது. ஆனால் ரஜினி அரசியல் குறித்துதான் மறைமுகமாக கூறியுள்ளதாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

விழாவில்
இந்த பதில் கட்சியை ஏன் இன்னும் தொடங்கவில்லை, எப்போது தொடங்குவீர்கள் என கேட்போருக்கும் உண்டானதாக உள்ளது. இவர் கூறுவதை வைத்து பார்க்கும் போது எப்படியும் தேர்தலில் தனக்குதான் வெற்றி என்பதை போல் உள்ளது. அதே போல் இந்த விழாவில் மற்றொரு பஞ்சையும் கூறியுள்ளார்.

ரஜினி கூறுவதாகவே தெரிகிறது
அதில் வந்தாச்சு, வெற்றி உறுதியாகிடுச்சு, ஹிட்டாக்க வேண்டியது தான் பாக்கி, மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டாகிடும் என்றும் கூறியுள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்பதை வந்தாச்சு என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்ததை வெற்றி உறுதியாகிடுச்சு என்றும் கட்சி தொடங்க வேண்டியதை ஹிட்டாக வேண்டியதுதான் பாக்கி என்றும் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க என்பதை தேர்தலில் தனது வெற்றி உறுதி என்றும் ரஜினி கூறுவதாகவே தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications