சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வருங்கால முதல்வர் வாழ்க".. சொல்லாதீங்க.. இருந்த ஒரு கோஷத்துக்கும்.. தடை போட்ட ரஜினிகாந்த்!

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை வருங்கால முதல்வர் என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.

Recommended Video

    கடைசில இப்படி ஆகிடுச்சே தலைவா... சோகத்தில் ரசிகர்கள்

    சுமார் கால் நூற்றாண்டு கால முழக்கத்தை திடீரென நிறுத்துமாறு ரஜினி கூறியிருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    ரஜினி இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்க்க முடியாது என்பது அவரது ரசிகர்களின் ஆதங்கமாகவும், உள்ளக்குமுறலாகவும் உள்ளது.

    கழகங்கள் இல்லாத தமிழகம்- பாஜகவின் மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கும் ரஜினிகாந்த்! கழகங்கள் இல்லாத தமிழகம்- பாஜகவின் மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கும் ரஜினிகாந்த்!

    அரசியல் பிரவேசம்

    அரசியல் பிரவேசம்

    கடந்த 1996-ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக பல நூறு முறை செய்திகள் உலா வந்துவிட்டன. ஆனால் அத்தனையும் கானல் நீராகவே இருந்தன. இந்நிலையில் கடந்த 2017 டிசம்பர் இறுதியில் தான் தனது அரசியல் பயணம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாக ரஜினி பேசினார். ஆனால் அப்போதும் போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் எனக் கூறி தனது ரசிகர்களுக்கு முறுக்கேற்றினார். முதல்வர் பதவி பற்றி அப்போதும் சரி, அதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளிலும் சரி ஒரு முறை கூட ரஜினி வாய் திறந்ததில்லை.

    முதல்வர் முழக்கம்

    முதல்வர் முழக்கம்

    கடந்த கால் நூற்றாண்டு காலமாக ரஜினி திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவரது ரசிகர்கள், வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே, புதிய நம்பிக்கையே என்றெல்லாம் வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஒட்டி தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். ஆண்டவனே நினைத்தாலும் நீ ஆளுவதை தடுக்க முடியாது என்பன போன்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் ஆர்வமிகுதியில் விளம்பரப் பதாகைகள் அண்மைக்காலமாக வைத்து வருகின்றனர்.

    முழக்கம் வேண்டாம்

    முழக்கம் வேண்டாம்

    இந்நிலையில் தன்னை வருங்கால முதல்வர் என அழைக்க வேண்டாம் என்றும், முதலில் அந்த கோஷத்தை நிறுத்த வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஹை வோல்ட் ஷாக் என்றே கூறலாம். காரணம், தனது தலைவன் ரஜினி இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவர் முன்னிறுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது, ரஜினியிடம் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

    சந்திக்க முயற்சி

    சந்திக்க முயற்சி

    ரஜினியின் இன்றைய பேச்சு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது. ரஜினி ரசிகர் மன்றத்தினர் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு தலைவரை முதல்வர் வேட்பாளராக நிற்கச் சொல்லுங்கள் என வலியுறுத்த தொடங்கியுள்ளனர். ஆனால் மாவட்டச் செயலாளர்களோ ரஜினியிடம் ஒரு கட்டத்துக்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர்.

    English summary
    rajini says, stop the slogan of the future chief minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X