ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் - அன்றே சொன்ன எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று என்று கடந்த மார்ச் மாதமே ஒன் இந்தியாவில் கட்டுரை வெளியானது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட ஆன்மீகத்திற்குதான் சரியாக இருப்பார் அதற்குக் காரணம் அவரது பெயர் எண் கூட்டுத்தொகை. அரசியலை விட ஆன்மீகம்தான் அவரை துரத்துகிறது எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு சரியாக இருக்க மாட்டார் இந்த ஆண்டு கட்சி ஆரம்பித்தால் முதல்வராக வாய்ப்பு இல்லை என்றே கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன். இன்னும் 3 ஆண்டுகள் ரஜினிகாந்திற்கு சரியில்லாத ஆண்டாக இருக்கிறது என்றும் கணித்துள்ளார் எண் கணித நிபுணர்.
ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார் என்பது எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வனின் கணிப்பு.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று கூறியுள்ள எண் கணித நிபுணர், கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த செய்தி ஒன் இந்தியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்தின் அறிவிப்பும் வெளியாகி வருகிறது.

ட்வீட்டிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அவ்வப்போது ட்விட்டரில் போடுவது சலசலப்பை ஏற்படுத்தும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுபவமே பாடம் என்று சொத்து வரி வழக்கு பற்றி ட்வீட்டரில் பதிவிட்டார். அக்டோபர் 29ஆம் ரஜினியின் ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை பற்றியும், மருத்துவர்கள் அறிவுரை பற்றியும் கூறியுள்ள ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து என அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் ரஜினிகாந்த் முழுமனதோடு அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அவரைப்பற்றியும், அவரது ஜாதக அமைப்பு பற்றியும், உடல் ஆரோக்கியும் பற்றியும் நன்றாக அவருக்கு தெரியும் அதனால்தான் அரசியலில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் எண்கள்
ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

அரசியலுக்கு வரமாட்டார்
இந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. 3 ஆண்டுகள் சினிமாவில்தான் இருப்பார். இவருடைய உடல் நலமும் மன நலமும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணம் ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 என்று வருவதுதான்.

7 சிறப்பான எண்
1973ல் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் திரைப்பட கல்லூரியில் நுழைந்து அபூர்வ ராகங்களில் நடிக்கிறார். கூட்டு எண் 7. இது அவருக்கு சரியான எண். அதுவும் ஆன்மீகத்திற்கு போவதற்கான எண் 7. சினிமாவை முடித்து விட்டு ஆன்மீகத்திற்கு போக துரிதப்படுத்தியது. சூப்பர் ஸ்டார் என்பதும் கூட்டுத்தொகை 7ல் வருகிறது. 7ஆம் எண் ரஜினிகாந்தை துரத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் அவர் இமயமலை வரைக்கும் சென்றிருக்கிறார்.

31/12/2017 அரசியல் அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ஆண்டு 31-12-2017. கூட்டுத்தொகை 8. இது ரஜினிக்கு சரியில்லாத எண். போர் வரட்டும் என்று சொன்னார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார் அவர் அரசியலை அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் என பல போர்கள் வந்து விட்டன. ரஜினிதான் போருக்கு தயராக இல்லை. அரசியலில் குதிக்க அவர் தயாராக இல்லை.

வாய்ப்பை நழுவ விட்ட ரஜினிகாந்த்
எம்ஜிஆர் இறந்த போதே ரஜினிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அப்போதும் அந்த வாய்ப்பை தவறவிட்டார். அதே போல 1996ஆம் ஆண்டில் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார். ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் தமிழகம் இருந்த போது திமுக தமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து கருணாநிதியை முதல்வராக்கினார்.

ரஜினிக்கு சரியாக இருக்காது
ரஜினிக்கு 69 வயதாகிறது. இதன் கூட்டுத்தொகை 6. இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப்பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். 2019ஆம் ஆண்டு சரியாக இருந்தது அப்போது அரசியலில் அடிஎடுத்து வைத்திருக்கலாம். 2020 முதல் 2023 வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பதே எண்கணித நிபுணரின் கணிப்பாகும்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications