எம்ஜிஆர் பிறந்தநாளில் ரஜினி ஆரம்பிக்கிறார் ? - ஜனவரி 17 நல்லநாளா?

சென்னை: எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் கட்சி தொடங்க நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் கட்சி தொடங்க நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகியுள்ளார்.

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரை பலரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் மட்டுமே எம்ஜிஆர் பாடல்களை பாடியும் விழாக்களில் எம்ஜிஆர் பாடல்களை ஒளிபரப்பு செய்தும் வாக்கு சேகரித்து வந்தனர்.

கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சார பயணத்தின் போது தான் எம்ஜிஆர் வாரிசு என்று சொன்னார். இதற்கு அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இப்போது ரஜினிகாந்தும் அதிமுகவினரையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் கவரும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அரசியல் வருகை

அரசியல் வருகை

1996ஆம் ஆண்டு முதலே அரசியல் பேசி வரும் ரஜினிகாந்த், 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். அறிவிப்போடு ரஜினி நின்று விட்டதால் அவரது ரசிகர்கள் தினசரியும் போஸ்டர் ஒட்டி அழைப்பு விடுத்தனர். சட்டசபைத் தேர்தல் தான் தனது இலக்கு என ரஜினி அறிவித்த கடந்த பல மாதங்களாகவே சைலண்ட் ஆக பல காரியங்களை செய்து வந்தார். ரஜினி ரசிகர்கள் பலரும் அவரின் அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

அறிவிப்பு வெளியாகும்

அறிவிப்பு வெளியாகும்

கடந்த மாதம் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதன் அறிவிப்பை டிசம்பர் இறுதியில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார். ரஜினியின் அறிவிப்பு அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விறுவிறு ரஜினி

விறுவிறு ரஜினி

பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் ஆட்சி

எம்ஜிஆர் ஆட்சி

இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ல் தனது கட்சியை தொடங்க நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிருப்தியில் அதிமுகவினர்

அதிருப்தியில் அதிமுகவினர்

கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ள நிலையில் இந்த செய்தியானது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கமல் போல ரஜினியும் எம்ஜிஆருக்கு சொந்தம் கொண்டாடுவதால் அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜனவரி 17 நல்லநாளா?

ஜனவரி 17 நல்லநாளா?

ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு பயணமும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. நவம்பர் 30ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பும், அவரது முதல் ட்வீட்டும் நல்ல நாள் பார்த்தே நடைபெற்றது. ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தை மாதம் 04ஆம் தேதி பஞ்சமி திதி, குரு பகவானுக்கு உகந்த பூரட்டாதி நட்சத்திரம் இணைந்துள்ளது. இந்த நாளில் ரஜினி கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவே ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் பாணியில் ரஜினி

எம்ஜிஆர் பாணியில் ரஜினி

1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அதே போல ரஜினி 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பாரா? வரும் 31ஆம் தேதி ரஜினி வெளியிடும் அறிவிப்பில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+